Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்எல்லையில் சாலைப் பணிகள் ராணுவ அமைச்சர் கோரிக்கை| Dinamalar

எல்லையில் சாலைப் பணிகள் ராணுவ அமைச்சர் கோரிக்கை| Dinamalar

புதுடில்லி:”நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எல்லையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்,” என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டில்லியில், எல்லை சாலைகள் நிறுவனத்தின், 63வது ஆண்டு விழா நடந்தது. இதில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:சமீப காலமாக இந்தியாவின் வடக்கு எல்லைக்கு அப்பால் சீனாவின் கட்டுமானங்கள் அதிகரித்துள்ளன. மலைப்பகுதிகளில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்கான திறன் சீனாவிடம் உள்ளது. அதனால் எந்தப் பகுதியிலும் அவர்களால் செல்ல முடிகிறது.
அதுபோல நம் எல்லையிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை எல்லை சாலைகள் நிறுவனம் விரைவாக மேற்கொள்ள வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

எல்லை சாலைகள் நிறுவனத்திற்கு நடப்பு பட்ஜெட்டில், 40 சதவீதம் அதிக தொகை ஒதுக்கப் பட்டு, 3,500 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நம் மக்களின் பாதுகாப்புக்கு 24 மணி நேரம் உழைப்போருக்கு அதிகபட்ச வசதிகளை செய்து கொடுப்பதற்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது. எல்லை சாலைகள் நிறுவனம் ஒழுக்கம், அர்ப்பணிப்பு, உழைப்பில் ஈடுபாடு ஆகியவற்றுக்கும் உதாரணமாக திகழ்கிறது. இந்தியாவை வலிமைமிக்க, பாதுகாப்பான, தற்சார்பு நாடாக உருவாக்குவதே பிரதமர் மோடியின் கனவு. அதை நனவாக்குவதில் எல்லை சாலைகள் நிறுவனத்திற்கு முக்கிய பங்கு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments