லடாக்கில் சீனாவின் அத்துமீறலைத் தொடர்ந்து, எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில், இருதரப்பு கமாண்டர்களுக்கு இடையே 6 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இருதரப்பும் பரஸ்பரம் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.
Also read: சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு – சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து
ஆனால், பாங்கோக் சோ பகுதியிலிருந்து படைகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று சீனா வலியுறுத்தியது. இதனால், எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், 7-வது சுற்றுப் பேச்சுவார்த்தை கிழக்கு லடாக் பகுதியில் வரும் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.