Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்"ஏழை மக்களுக்கான நல்ல அரசை காங்கிரஸ் மட்டும்தான் தர முடியும் " - ராகுல்

“ஏழை மக்களுக்கான நல்ல அரசை காங்கிரஸ் மட்டும்தான் தர முடியும் ” – ராகுல்

புதுடில்லி: காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் நலனுக்காக அரசை காங்கிரஸ் மட்டுமே தர முடியும் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கை: 2014ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் காஸ் சிலிண்டர் ரூ.410 விநியோகம் செய்யப்பட்டது. அப்போது மானியமாக ரூ. 827 வழங்கப்பட்டது. தற்போது 2022ல் பா.ஜ., ஆட்சியில் காஸ் சிலிண்டர் ரூ.999க்கு விற்பனை செய்யப்படுகிறது. மானியம் ஏதும் இல்லை.

latest tamil news

தற்போது ஒரு சிலிண்டர் வாங்கும் விலையில் அப்போது 2 சிலிண்டர் வாங்க முடியும். ஏழை மற்றும் நடுத்தர இந்திய குடும்பங்களின் நலனுக்காக காங்கிரஸ் மட்டுமே ஆட்சி செய்யும். இது தான் நமது பொருளாதார கொள்கையின் அடிப்படை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments