Thursday, June 30, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்ஒத்தி வைக்கப்பட்ட ஆம்பூர் பிரியாணி திருவிழா - மாட்டிறைச்சி புறக்கணிப்பால் கிளம்பிய எதிர்ப்பு காரணமா? |...

ஒத்தி வைக்கப்பட்ட ஆம்பூர் பிரியாணி திருவிழா – மாட்டிறைச்சி புறக்கணிப்பால் கிளம்பிய எதிர்ப்பு காரணமா? | protest against beef boycott – ambur biryani festival postponed

ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா

‘மாட்டிறைச்சி பிரியாணி வழங்கக்கூடாது. அதுமட்டுமின்றி, பிரியாணி திருவிழாவையே நடத்தக்கூடாது’ என்று மற்றொரு பக்கம் இந்து அமைப்புகளும் போராட்டத்தை கையிலெடுத்தன.

இது தொடர்பாக பேசியிருந்த இந்து முன்னணியின் வேலூர் கோட்டத் தலைவர் மகேஷ், ‘‘மக்கள் பிரச்னைகளை தீர்க்க நேரமில்லாத அதிகாரிகள், பிரியாணி திருவிழா நடத்துவது ஏற்புடையதல்ல. இதை அரசாங்கமே செய்யக்கூடாது. பிரியாணி என்பது ஒருசாராரின் உணவு. அவர்களை ஊக்கப்படுத்துவது போன்ற செயல்களில், மாவட்ட ஆட்சியர் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. திருப்பதூர் மாவட்ட மக்கள் பிரியாணி திருவிழாவைப் புறக்கணிக்க வேண்டும். இந்த திருவிழாவை இந்து முன்னணி எதிர்க்கிறது. மாட்டிறைச்சி பிரியாணியை வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுக்கக் கூடாது. மீறி வழங்கினால், இந்து முன்னணி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும்’’ என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘‘சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்யும் என அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. எனவே, பிரியாணி திருவிழாவில் பொது மக்கள் கலந்து கொள்ள முடியாமல் போகும். எனவே, ஆம்பூர் பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது’’ என தெரிவித்துள்ளார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments