“ஒருத்தரைக் கொண்டாடுறதும் வெறுக்கிறதும் அவரவர் விருப்பம்" – லைவ்வில் கலங்கிய கண்மணி!

செய்தி வாசிப்பாளர் கண்மணியும், ‘இதயத்தை திருடாதே’ சீரியல் புகழ் நவீனும் தங்களின் காதலை உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இருவரும் அவரவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்கள். தவிர, கண்மணிக்காகப் பாடல் ஒன்றைப் பாடி நவீன் தன் காதலை வெளிப்படுத்திய வீடியோவை கண்மணி பகிர்ந்திருந்தார். கண்மணி – நவீன் ஜோடி குறித்து நிறைய பாசிட்டிவ், நெகட்டிவ் கம்மென்ட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அது தொடர்பாக கண்மணி நேற்று இன்ஸ்டாகிராம் லைவ்வில் சில விஷயங்கள் பகிர்ந்திருந்தார். அவர் பேசியதாவது,

கண்மணி – நவீன்

‘எதுனாலும் ஃபேஸ் பண்ணிடலாம் என்கிற நம்பிக்கையையும், தைரியத்தையும் நீங்க கொடுத்திருக்கீங்க. என் வாழ்க்கையில் நடந்த எல்லாமே எதிர்பாராததுதான்! இப்ப வரைக்குமே எதிர்பாராததுதான் நடந்துட்டிருக்கு. உங்களோட சப்போர்ட்டுக்கு நன்றி.

எதிர்பாராதது சிலருடைய வாழ்க்கையில் நடக்கும். அப்படித்தான் என் வாழ்க்கையிலும் நடந்துட்டிருக்கு. நல்லபடியா என் வாழ்க்கை போய்ட்டிருக்கு. சீக்கிரமே அது தொடர்பா விளக்கமா இன்னொரு லைவ்வில் உங்க எல்லார்கிட்டேயும் பகிர்ந்துக்கிறேன்.

கண்மணி – நவீன்

ஒருத்தரைக் கொண்டாடுறதும் வெறுக்கிறதும் அவரவர் விருப்பம். பிடிச்சுப்போய் கொண்டாடுறவங்களுக்கு நன்றி! பிடிக்காதவங்களுக்கு ஓகேன்னு கடந்துடுறேன். எல்லாருக்கும் நன்றி சொல்லணும்னு நினைச்சேன். சொல்லிட்டேன்..!” என்றவாறு லைவ்வில் இருந்து விடைபெற்றார்.

‘இதயத்தை திருடாதே’ சீரியல் ரசிகர்கள் இந்தத் தொடரின் கதாநாயகி பிந்துவும், நாயகன் நவீனும் ரீல் லைஃப் ஜோடியாக நடித்ததனால் அந்தத் தொடர் ரசிகர்கள் பலரும் அவர்கள் ரியல் லைஃப் ஜோடியாக வேண்டும் என எதிர்பார்த்திருந்தனர். தற்போது, கண்மணியுடன் இருக்கும் புகைப்படங்களை நவீன் பதிவிட்டதால் பிந்துவை ஏமாற்றிவிட்டதாகக்கூறி சிலர் சமூக வலைதளப் பக்கங்களில் நவீனுக்கு எதிராகக் கருத்துகள் பதிவிட்டனர்

ஆனால், ஆரம்பம் முதலே நவீனும் சரி, பிந்துவும் சரி, ’நாங்கள் நண்பர்கள்’ எனக் கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

Your email address will not be published.