Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்"ஒருபோதும் அவனை இப்படிப் பார்த்தது கிடையாது!"- வில் ஸ்மித்தின் தாயார் கரோலின் உருக்கம் | Will...

“ஒருபோதும் அவனை இப்படிப் பார்த்தது கிடையாது!”- வில் ஸ்மித்தின் தாயார் கரோலின் உருக்கம் | Will Smith’s mom shocked over his behaviour during the Oscars

கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் தாக்கிய சம்பவத்திற்குப் பல்வேறு தரப்பிலான கருத்துகள், விவாதங்கள் என இரண்டாவது நாளும் அந்நிகழ்வு பேசுபொருளாகி வருகிறது. ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள டால்பி தியேட்டரில் கடந்த ஞாயிறு இரவு நடைபெற்றது. அந்த நிகழ்வில்தான் கிறிஸ், வில் ஸ்மித்தின் மனைவி ஜடாவின் மருத்துவ ரீதியிலான பிரச்னையை வைத்து கேலி செய்ய அதற்கு வில் ஸ்மித் எதிர்வினையாற்றினார்.

வில் ஸ்மித் தன்னுடைய அம்மா கரோலினுடன்...

வில் ஸ்மித் தன்னுடைய அம்மா கரோலினுடன்…

வில் ஸ்மித்தின் அம்மா கரோலின், “அவன் எப்போதும் மக்களோடு பழக விரும்புபவன். அவன் மொத்த வாழ்க்கையிலும் இதுபோல நடந்தது கொண்டது இதுவே முதல் முறை” என்று தெரிவித்துள்ளார். “நான் ஒருபோதும் அவனை இப்படி பார்த்தது கிடையாது” எனத் தன்னுடைய ஆச்சரியத்தையும் கரோலின் வெளிப்படுத்தி இருக்கிறார்.

வில்லின் சகோதரி எலன் ஸ்மித், “எல்லோருமே ஏதோவொரு வகையில் கேலிக்கும் தவறான நடத்தைக்கும் உள்ளாக்கப்படுகிறோம். மக்கள் பலவாறு பேசுகிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியாது அப்படி நடந்துகொள்ள எது காரணம் என்று. நான் வில் ஸ்மித்தோடு பேசினேன். அவர் கடந்து வந்தது, இப்போது எந்தளவிற்கு வந்திருக்கிறார் என்பதை பற்றியெல்லாம் அவர் பேசியதைக் கேட்டு நான் மனம் உடைந்து போனேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு வில் ஸ்மித்தின் மனைவி ஜடா ஸ்மித், “இது காயங்களை ஆற்றிக் கொள்வதற்கான நேரம், நான் அதற்காக இங்கு வந்திருக்கிறேன்” என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதேபோல, சம்பவம் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் தான் நேரில் கண்டதைப் பற்றி விழாவில் பார்டெண்டராக பணியாற்றிய டேனியல் ரால்ஸ்டன் (Daniel Ralston) என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்திருக்கிறார். அந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. அதில், “ஆஸ்கரில் பார்டெண்ட்டிங் பணியில் இருந்தேன். அந்தச் சம்பவத்தின் போது அங்கு இருந்த அனைவரும் குடிப்பதை நிறுத்திவிட்டனர்” என்று பகிர்ந்திருக்கிறார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments