காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ‘இந்திய நாட்டை பேரபாயம் சூழ்ந்துள்ளது. அதாவது, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவ அமைப்புகளால் நாடு எதிர்கொண்டுவரும் சவால்கள் குறித்து நமக்குள் விவாதிப்பதற்கு இந்தக் கூட்டம் நல்ல வாய்ப்பை அளித்துள்ளது” என்று பேசினார்.
காங்கிரஸின் முன்னாள் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, ‘இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டை பிரிவினையில் வைத்திருப்பது, மக்களை பயத்திலும் பாதுகாப்பற்ற நிலையிலும் வாழ நிர்பந்திப்பது, சிறுபான்மையினரை கொடூரமாக நடத்துவது என்கிற போக்கு பா.ஜ.க ஆட்சியில் அதிகரித்துவருகிறது. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் துணையாக இருக்க வேண்டும்’ என்றார்.
ஆகவே, காங்கிரஸ் கட்சி எடுத்துள்ள இந்த முடிவுகள், தேசிய அரசியலில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும். அது தேசத்தை நல்வழியில் கொண்டுசெல்ல உதவும்” என்றார் செல்வப்பெருந்தகை.