லடாக் பகுதியில் 38,000 சதுர கிலோ மீட்டர் பகுதியை 1962 ஆண்டு போரின் போது சீனா கைப்பற்றி வைத்திருக்கிறது. இதே போல சிக்கிமின் கிழக்கு பகுதியில் டோக்லாம் பகுதியை உரிமை கொண்டாடி வருகிறது. சமீப காலமாக அருணாச்சல பிரதேசத்தில் 90,000 சதுர கிலோ மீட்டர் பகுதி தங்களது ஆளுகைக்கு உட்பட்ட பகுதி எனவும் அங்கே இந்தியா கட்டுமானங்களை ஏற்படுத்தக்கூடாது என்றும் சீனா எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.
லடாக் பகுதியில் தான் ஆக்கிரமித்துள்ள எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சுமார் 5000 வீரர்களையும், போர் தளவாடங்களையும் சீனா குவித்து வருகிறது. அதற்கு முன்பாகவே இந்திய பகுதியில் இந்தியா புதிய சாலை ஒன்றை அமைத்து வருகிறது. இதன் அருகில் ஆக்கிரமிப்பு லடாக் பகுதியில் பெரிய அளவில் ராணுவ பதுங்கு குழிகளையும் கட்டடங்களையும் சீனா கட்டி வருகிறது.
மே 5 மற்றும் 6 தேதிகளில் இந்திய எல்லையில் உள்ள பாங்ஓங் பகுதியில் புகுந்த சீன ராணுவ வீரர்களை. இந்திய படை வீரர்கள் அமைதியான வழியில் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது இந்தோ – திபெத் எல்லைக் காவல்துறை வீரர்களின் ஆயுதங்களை சீன மக்கள் ராணுவத்தினர் பறித்துக் கொண்டதாகவும் சிலரை தடுத்து வைத்துக்கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதே போல சிக்கிமின் நாகு லா பகுதியில் மே 10 அன்று இந்திய சீன படையினருக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரண்டு ராணுவ வீரர்களும் கற்களை வீசி தக்குதலில் ஈடுபட்டனர். சிலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சீனாவில் அத்துமீறல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைவர் விபின் ராவத், முப்படைகளின் தளபதி ஆகியோர் இதில் பங்கேற்றனர். சீனாவின் நடவடிக்கை தொடர்பாக தளபதிகள் விளக்கம் அளித்தனர். எல்லைப் பகுதியில் தற்போதுள்ள நிலையை தொடர இந்திய படையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே நேரத்தில் காஷ்மீர், சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசத்தில் சீனாவும், காஷ்மீரில் பாக்கிஸ்தானும், உத்தரகாண்ட் எல்லையில் நேபாளமும் இந்திய எல்லையில் சிக்கலை ஏற்படுத்தி வருவது இதுவே முதல் முறை ஆகும்
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.