Sunday, July 3, 2022
Homeஅரசியல் செய்திகள்ஒற்றை தலைமையை ஏற்காதவர்கள் தி.மு.க.,வின் பி டீம்: அன்பழகன்| Dinamalar

ஒற்றை தலைமையை ஏற்காதவர்கள் தி.மு.க.,வின் பி டீம்: அன்பழகன்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுச்சேரி: ‘ஒற்றை தலைமையை ஏற்காதவர்கள் அ.தி.மு.க.,விற்கு எதிரானவர்கள்’ என புதுச்சேரி கிழக்கு அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

latest tamil news

தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா பதவிக்கு இரண்டு பேரை தேர்வு செய்ய வேண்டிய நிலை சமீபத்தில் ஏற்பட்டது. பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகு இருவர் தேர்வு செய்யப் பட்டனர்.

இந்த தாமதம் முழுக்க முழுக்க இரட்டை தலைமையால் தான் ஏற்பட்டது. எனவே தான் ஒற்றை தலைமை தேவை என்கிறோம்.புகழேந்தி என்பவர் அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர். இவர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., வீட்டில் அமர்ந்துகொண்டு இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியை தவறாக பேசி வருகிறார்.பொதுக்குழு கூட்டத்திற்கு நீதிமன்றம் மூலம் யார் தடை உத்தரவு பெற்றாலும் அவர்கள் கட்சிக்கு எதிரானவர்கள். கட்சியில் இருந்து விலக்கப்பட வேண்டியவர்கள்.

latest tamil news

பொதுச்செயலாளர் பதவி என்பது ஜெயலலிதா வகித்த பதவி. அப்பதவியில் யாரும் அமரக்கூடாது என்பது கேலிக்கூத்தானது.முதல்வர் பதவி கூட அவர் வகித்ததுதான். அதற்காக முதல்வர் பதவியை யாரும் வகிக்காமல் இருக்கலாமா.அ.தி.மு.க.,விற்கு பொதுச் செயலாளர் பதவி அவசியமானது.

தி.மு.க.,வை எதிர்க்க கூடிய தலைவர் அப்பதவியில் அமர வேண்டும். அந்த பதவிக்கு தகுதியானர் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி.ஒற்றை தலைமையை ஏற்காதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அ.தி.மு.க.,விற்கு எதிரானவர்கள். அவர்கள் தி.மு.க.,வின் ‘பி’ டீம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments