Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்ஒலிபெருக்கிகளை அகற்ற கெடு மஹாராஷ்டிரா போலீஸ் உஷார்| Dinamalar

ஒலிபெருக்கிகளை அகற்ற கெடு மஹாராஷ்டிரா போலீஸ் உஷார்| Dinamalar

மும்பை:’மசூதிகளில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை மே, 3ம் தேதிக்குள் அகற்ற வேண்டும்’ என, மஹாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சி கெடு விதித்துள்ள நிலையில், பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்க மாநில போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, உத்தவ் தாக்கரேயின் சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே, மஹாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவராக உள்ளார்.’மாநிலத்தில் உள்ள மசூதிகளில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் அதிக சப்தத்தை எழுப்புவதால், அனைத்தையும் அகற்ற வேண்டும்’ என ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், மே 3ம் தேதி வரை அதற்கு அவகாசம் அளிப்பதாக கெடு விதித்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் அவுரங்காபாதில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ் தாக்கரே பேசியதாவது: உ.பி.,யில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற முடியும்போது, மஹாராஷ்டிரா அரசு மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது?3ம் தேதிக்குள் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், 4ம் தேதியில் இருந்து, மிகவும் அதிக சப்தத்துடன், ஹனுமன் சாலிசாவை நாங்கள் ஒலிபரப்புவோம். மேலும், கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அதன்பிறகு நடக்கும் சம்பவங்களுக்கு நாங்கள் பொறுப்பில்லை.இவ்வாறு அவர் பேசிஇருந்தார்.

ராஜ் தாக்கரே விடுத்த கெடு நேற்றுடன் முடிந்ததை அடுத்து, நிலைமையை சமாளிப்பது குறித்து, மாநில உள்துறை அமைச்சர் திலீப் வல்சே பாட்டீலுடன், போலீஸ் டி.ஜி.பி., ரஜ்னீஷ் சேத் நேற்று ஆலோசனை நடத்தினார்.இது பற்றி அவர் கூறுகையில், ”அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். விடுப்புகள் ரத்து செய்யப்பட்டு, அனைத்து போலீசாரும் பணிக்கு வர உத்தரவிடப்பட்டு உள்ளது.

”சட்டத்தை யாராவது கையில் எடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். இதற்கிடையே, வன்முறையை துாண்டும் வகையில் பேசியதாக ராஜ் தாக்கரே மீது மஹாராஷ்டிரா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments