Friday, June 17, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்ஓடும் பேருந்திலிருந்து இறங்க சொன்ன நடத்துநர்; நூலிழையில் உயிர் தப்பிய மாணவி - நடந்தது என்ன?...

ஓடும் பேருந்திலிருந்து இறங்க சொன்ன நடத்துநர்; நூலிழையில் உயிர் தப்பிய மாணவி – நடந்தது என்ன? | school student accident in private bus, what happened

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்கிரமராஜ். இவர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவரின் மனைவி சுமதி. இந்த தம்பதியின் 15 வயது மகள், அருகில் உள்ள திம்மநாயக்கன்பட்டியில் இருக்கும் அரசுப்பள்ளியில் 9 -ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் திம்மநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் நடக்கும் ஆங்கில தேர்வை எழுதச் செல்வதற்காக பேருந்து ஏறி செல்வதற்கு ஏதுவாக, ஈஸ்வரமூர்த்திபாளையம் பேருந்து நிறுத்ததில் நின்ருந்தார். அப்போது, அவர் வழக்கமாக பயணிக்கும் அரசு பேருந்தை தவறவிட்டதால், அதனை தொடர்ந்து வந்த தனியார் பேருந்து ஒன்றில் ஏறியுள்ளளார். திம்மநாயக்கன்பட்டி அரசு பள்ளிக்கு முன் 100 மீட்டருக்கு முன்பாக பேருந்து நிறுத்தம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ஓடும் பேருந்தில் இருந்து இறங்கும் மாணவி

ஓடும் பேருந்தில் இருந்து இறங்கும் மாணவி

இந்த நிலையில், ‘தேர்வு நடக்கிறது. நேரம் ஆகிவிட்டது. அதனால், பள்ளி வாசலில் இறக்கி விடுங்கண்ணா’ என்று நடத்துநரிடம் அந்த மாணவி கேட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அந்த நடத்துநரோ, ‘திம்மநாயக்கன்பட்டி பள்ளியில் பஸ் நிற்காது. அங்கு மெதுவாக வண்டி செல்லும் போது, வேண்டுமானா நீ இறங்கிக்க’ என்று நடத்துநர் சொன்னதாக தெரிகிறது. இந்தநிலையில், திம்மநாயக்கன்பட்டி அரசு பள்ளி முன் பேருந்து வந்தபோது, பேருந்து மெதுவாக இயக்கப்பட்டதால், மாணவி இறங்கியுள்ளார். ஆனால், பேருந்து சென்ற வேகம் அதிகளவில் இருந்ததால், அந்த மாணவி பேருந்தைவிட்டு இறங்கும்போது, கால் தவறி கீழே விழுந்துவிட்டார். அதைப்பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments