Thursday, June 30, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்கடலூர்: கழுத்தை துளைத்துச் சென்ற தோட்டா! - மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட காவலர் |...

கடலூர்: கழுத்தை துளைத்துச் சென்ற தோட்டா! – மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட காவலர் | In cuddalore district, a policeman who committed suicide due to to stress over fighting with is mother

கடலூர் மாவட்டம், புவனகிரியை அடுத்த சேத்திரக்கிள்ளை கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி, ஆயுதப் பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது 10 மற்றும் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைப்பெற்று வருகின்றன. அதன்படி சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விடைத்தாள்கள், வீனஸ் மெட்ரிக்குலேஷன் என்ற தனியார் பள்ளியில் வைக்கப்பட்டிருந்தன. விடைத்தாளின் பாதுகாப்புக்காக அவை வைக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட காவலர் பெரியசாமி

தற்கொலை செய்துகொண்ட காவலர் பெரியசாமி

அதன்படி நேற்று 17-ம் தேதி பெரியசாமியுடன் ராஜ்குமார் என்ற காவலரும் பணியில் இருந்திருக்கிறார். நேற்றிரவு வழக்கம்போல இருவரும் உணவருந்திவிட்டு தூங்க சென்றிருக்கின்றனர். அதையடுத்து அதிகாலை 5 மணிக்கு அறையைவிட்டு வெளியே வந்த பெரியசாமி, அங்கிருந்த பாதுகாப்பு துப்பாக்கியை எடுத்து தனது கழுத்தில் வைத்து ட்ரிக்கரை அழுத்தியிருக்கிறார். கழுத்தை துளைத்துக் கொண்டு சென்ற அந்த தோட்டாவால் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த பெரியசாமி, சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments