Sunday, July 3, 2022
Homeசினிமா செய்திகள்கரண் ஜோகரின் 50-வது பிறந்தநாள்: அதிகாலை வரை நடந்த பார்ட்டி; திரண்டு வந்த பாலிவுட் நட்சத்திரங்கள்!|...

கரண் ஜோகரின் 50-வது பிறந்தநாள்: அதிகாலை வரை நடந்த பார்ட்டி; திரண்டு வந்த பாலிவுட் நட்சத்திரங்கள்!| Bollywood celebrities gathered to congratulate Bollywood director Karan Johar on his 50th birthday

பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் பாலிவுட் பிரபலங்கள் அனைவரின் குட்புக்கிலும் இருப்பவர். திருமணமே செய்து கொள்ளாமல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று வாழ்ந்து வருகிறார். அவர் நேற்று இரவு தனது 50-வது பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடினார். இதையடுத்து அந்தேரியில் உள்ள யஷ்ராஜ் ஸ்டூடியோவில் பிரமாண்ட பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். பிறந்த நாளுக்காக சிறப்பு பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது.

சல்மான்கான்

சல்மான்கான்

இதில் நடிகை கரீனா கபூர் அவரது கணவர் சைஃப் அலிகான், அனுஷ்கா சர்மா, ஷாருக் கான் மனைவி கவுரி கான், நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், ஸ்வேதா பச்சன், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தன்னா, டைகர் ஷெரீப், மலைகா அரோரா என்று பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நடிகர் சல்மான் கானும் கலந்து கொண்டார். பிறந்தநாள் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தன் காதலி சபா ஆசாத்துடன் ஜோடியாக இந்த பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டார். நடிகர் அமீர்கான் மற்றும் அவரின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இணைந்தே பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்திருந்தனர். ரன்பீர் கபூர் தனது தாயார் நீது கபூரை அழைத்து வந்தார். அலியா பட் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் விழாவிற்கு வரவில்லை. அவர்கள் வெளிநாடு படப்பிடிப்புகளில் இருக்கின்றனர். ஆனால் புதிய திருமண ஜோடியான கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கெளஷல் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர்.

சைஃப் அலிகான்-கரீனா, கிரன்-அமீர்கான்

சைஃப் அலிகான்-கரீனா, கிரன்-அமீர்கான்

அபிஷேக் பச்சன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் விழாவிற்கு வந்திருந்தனர். இதில் அபிஷேக் பச்சனும், கரண் ஜோகரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள் ஆவர். பரா கான், மனீஷ் மல்கோத்ரா, ஆகியோரும் கரணின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர். பார்ட்டி இன்று அதிகாலை வரை நடைபெற்றது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments