Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்கர்நாடக அரசு தொடர வேண்டுமா? காங்கிரசின் சித்தராமையா தாக்கு| Dinamalar

கர்நாடக அரசு தொடர வேண்டுமா? காங்கிரசின் சித்தராமையா தாக்கு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பெங்களூரு: கர்நாடக பா.ஜ.க., அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் மாநிலத்தில் தேவையான ஒருவருக்கு கூட வீடுகள் கட்டித்தரவில்லை. என் ஆட்சியில் 15 லட்சம் வீடுகள் வழங்கப்பட்டது. இந்த ஆட்சி தொடர வேண்டுமா என எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தாக்கி பேசினார்.

latest tamil news

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க., ஆட்சி நடக்கிறது. எடியூரப்பா மீது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி அடைந்திருந்ததால் அவர் ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து பசவராஜ் பொம்மை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.க., மூத்த எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீஸ் யத்னால் என்பவர், ரூ.2,500 கோடி திரட்டி தந்தால் முதல்வர் பதவியை வழங்குவதாக சிலர் தன்னை அணுகியதாக கூறி பரபரப்பை கிளப்பினார். அவர்கள் மோசடி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

latest tamil news

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா அவ்விவகாரத்தை கையில் எடுத்து பேசியுள்ளார். “பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை. நியமிக்கப்பட்ட முதல்வர். அதனால் அவர் எதுவும் செய்வதில்லை. அவர் பணம் கொடுத்து முதல்வர் ஆனார். அவர் ஏன் வேலை செய்ய போகிறார்.

ஆர்.எஸ்.எஸ்., அவரை முதல்வர் ஆக்கியது. அவர்கள் சொல்வதை கேட்டால் போதும். இந்த அரசு நான்கு ஆண்டுகளில் தேவையானவர்களுக்கு ஒரு வீடு கூட கட்டித்தரவில்லை. இது போன்ற அரசாங்கம் தொடர வேண்டுமா. இந்த அரசு வெட்கப்பட வேண்டும். ஐந்தாண்டுகள் முதலமைச்சராக இருந்த நான் 15 லட்சம் வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளேன்.” என கூறினார்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments