இந்த சூழலில், லடாக்கில் உள்ள லே பகுதியில் பிரதமர் மோடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடன் ஹெலிகாப்டரில் அதிகாலையில் லடாக் சென்ற பிரதமர், அங்கிருந்து, சீனாவுடனான மோதலில் காயமடைந்து லே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து கடல்மட்டத்திலிருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள நிமு பகுதிக்கு சென்ற மோடி, அங்கு ராணுவம், விமானப்படை மற்றும் இந்தோ – திபெத்திய எல்லை காவல்படை வீரர்களை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா – சீனா இடையேயான மோதல் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
படிக்க: துக்க நிகழ்வில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா – இன்று மேலும் 19 பேருக்கு தொற்று உறுதி
படிக்க: டிக்-டாக் செயலி தடையால் ₹45,000 கோடி இழப்பு… சீன அரசு ஊடகம் தகவல்
இதனை அடுத்து, அங்குள்ள வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது, “கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது. கடும் சவால்களுக்கு மத்தியில் இந்தியாவை நீங்கள் காத்து வருகிறீர்கள்.
மனித நேயம், அமைதியை இந்தியா விரும்புகிறது. இந்திய ராணுவத்தின் நெருப்பு போன்ற ஆக்ரோசத்தை எதிரிகள் பார்த்துள்ளனர். அமைதியை எதிர்பார்த்தாலும் நமது நிலத்தை பாதுகாக்கும் விவகாரத்தில் அச்சம் கொள்ளப்போவதில்லை நாடு பிடிக்கும் காலம் என்பது மலையேறிச் சென்றுவிட்டது.
உங்களால் நாட்டு மக்கள் பெருமையடைகிறார்கள். சுயசார்பு இந்தியா என்பது உங்களால் நிறைவேறும் என்று கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.