கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 35 சீன படையினர் உயிரிழந்துள்ளதாக ஆராய்ச்சியாளர் தகவல்

லடாக்கின் கிழக்குப் பகுதியில் இந்திய-சீன எல்லையில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி இரவில் இந்திய – சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். பதில் தாக்குதலில் சீன வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் இறந்ததாக தகவல் வெளியானது.

ஆனால், இதுகுறித்து அந்நாட்டு ராணுவம் அதிகாரப்பூர்வ தகவல் எதையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், கல்வான் மோதலில் பலியான சீன வீரர்களின் கல்லறை புகைப்படம் சமூக வலைதளங்களில் அண்மையில் வெளியானது.

இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை பற்றி சீனா தரப்பில் உறுதி செய்யப்படவில்லை. அதே நேரம், சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் செங் கைபூ என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில், கல்வான் தாக்குதலில் சீன படையினர் 35 பேர் உயிரிழந்திருப்பதாக பதிவிட்டுள்ளார். மோதலில் உயிரிழந்த சீன படை வீரர்களின் கல்லறை புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

Leave a Comment

Your email address will not be published.