Thursday, June 30, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்களைகட்டிய வேலங்காடு ஏரித்திருவிழா... புஷ்ப ரதத்தில் வீதிஉலா வந்த பொற்கொடியம்மன்! | Vellore Velankadu lake...

களைகட்டிய வேலங்காடு ஏரித்திருவிழா… புஷ்ப ரதத்தில் வீதிஉலா வந்த பொற்கொடியம்மன்! | Vellore Velankadu lake festival celebrated by the devotees

வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பிரசித்திப் பெற்ற திருவிழாக்களில், வேலங்காடு வல்லண்டராமம் பொற்கொடி அம்மன் கோயில் ஏரித்திருவிழாவும் ஒன்றாகும். வேலங்காடு கிராமத்திலுள்ள ஏரியில் எழுந்தருளியிருக்கும் பொற்கொடி அம்மனுக்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி புதன்கிழமையில் இந்த விழா எடுக்கப்படுகிறது. அனைத்து விவசாயிகளும், அவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளும் நோய் நொடியின்றியிருப்பதற்காக வல்லண்டராமம், அன்னாசிபாளையம், வேலங்காடு, பனங்காடு ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நூறாண்டுகளுக்கும் மேலாக இணைந்து நடத்துகிறார்கள்.

வேலங்காடு ஏரித்திருவிழா

வேலங்காடு ஏரித்திருவிழா

ஏராளமான பக்தர்கள் தங்கள் பாரம்பர்ய வழக்கப்படி மாட்டு வண்டியில் பசுந்தழைகள் கட்டி தென்னை ஓலையை கூடாரம்போல் அமைத்தும், டிராக்டர், வேன், ஆட்டோக்களிலும் குடும்பத்துடன் உறவினர்களை அழைத்துக்கொண்டு வருவார்கள். அங்கேயே, சமைத்து சாப்பிட்டுவிட்டுத் தங்கள் கிராமத்துக்குச் செல்வார்கள். அதன்படி, இவ்வாண்டுத் திருவிழா சந்தனகாப்பு அலங்காரம், தீபாராதனையுடன் நேற்று தொடங்கியது. நள்ளிரவு 12 மணியளவில் வாண வேடிக்கை, கரகாட்டம், நையாண்டி மேளங்களுடன் புஷ்ப ரதத்தில் அம்மன் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து, இன்று காலை முதல் புஷ்ப ரதம் வீதி உலா நடந்துகொண்டிருக்கிறது. முதலில், பொற்கொடியம்மன் கோயிலிலிருந்து சுவாமி ஊர்வலமாக வேலங்காடு ஏரிக்குச் வந்தது. அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பொங்கல் வைத்து, ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டனர். விழாவிற்கு வந்த விவசாயிகள், கால்நடைகளையும் அழைத்து வந்திருந்தனர். கால்நடைகளுடன் அவர்கள் கோயிலை வலம்வந்து சாமியை வழிபட்டனர்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments