காங்கிரசில் அவசர மாற்றம் தேவை: சோனியா அவசர முடிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஜெய்ப்பூர்: காங்கிரசில் அவசரமாக மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் எனவும், நாம் பணிபுரியும் முறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும் என அக்கட்சி தலைவர் சோனியா கூறியுள்ளார்.

ராஜஸ்தானின் உதய்ப்பூரில் நடக்கும் சிந்தனையாளர் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா பேசியதாவது:

latest tamil news

கட்சியின் அமைப்பில் உடனடியாக மாற்றம் தேவைப்படுகிறது. நாம் பணிபுரியும் முறையையும் மாற்ற வேண்டும். இந்த மாநாட்டில் கட்சியினர் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தலாம். ஆனால், கட்சியின் வலிமை மற்றும் ஒற்றுமை குறித்த செய்தி நாடு முழுவதும் செல்ல வேண்டும். நமது தனிப்பட்ட விருப்பங்களை விட கட்சியை முக்கியமானதாக கருத வேண்டும். கட்சி ஏராளமானவற்றை செய்துள்ளது. தற்போது திருப்பிதர வேண்டிய நேரம் இது.

latest tamil news

குறைந்த அரசு, பெரிய நிர்வாகம் என பிரதமர் மோடியும் பா.ஜ.,வும் வலியுறுத்துகிறது. இதற்கு சிறுபான்மையினர் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவது என்பது அர்த்தம். வரலாற்றை மாற்றியமைக்க முழுமனதுடன் முயற்சி எனவும் அர்த்தமாகிறது. மஹாத்மா காந்தியை கொன்றவர்களை பெருமைப்படுத்தி, ஜவஹர்லால் நேரு செய்த பணிகளை வரலாற்றில் இருந்து அழிக்கவும் நினைக்கின்றனர். பேச்சாற்றல் உள்ள பிரதமர் மோடி, மக்களுக்கு ஆறுதலாக எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார்.

latest tamil news

இவ்வாறு சோனியா பேசினார்.

Advertisement

Source link

Leave a Comment

Your email address will not be published.