காங்கிரஸின் சிந்தனை அமர்வு மாநாடு ஹைலைட்ஸ்!

சோனியா காந்தி

5 மாநிலத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, ராஜஸ்தானில் `சிந்தனை அமர்வு மாநாடு’ நடத்தப்போவதாக டெல்லியில் மார்ச் 14-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

காங்கிரஸ்

மே 13,14,15 என 3 நாள்கள் நடைபெறும் இந்த சிந்தனை அமர்வு மாநாடானது, காங்கிரஸில் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது.

`ஒரே குடும்பம், ஒரே டிக்கெட்’ என்ற வகையில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தல் சீட் வழங்குவது பற்றி ஆலோசிக்கப்படுவதாகத் தகவல்.

மே 13, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தொடங்கிய இந்த மாநாட்டில், காங்கிரஸ் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட 400 மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

“மோடியும், அவரின் கட்சியினரும் ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி’ என்று கூறி வருகின்றனர்” என சிந்தனை அமர்வு மாநாடு தொடக்க விழாவில் சோனியா காந்தி பேசினார்.

“இந்தியாவின் ஜனநாயகத்துக்கும், பன்முகத்தன்மைக்கும் அவர்களால்(பாஜக) ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர்கள், சிறுபான்மை மக்களை குறிவைத்து எப்போதும் பதற்ற நிலையிலேயே வைக்கின்றனர்.” – சோனியாகாந்தி

“பா.ஜ.க-வுக்கு எதிரான கூட்டணியை அமைப்பதைப் பொறுத்தவரையில், காங்கிரஸ் அனைவரையும் ஒன்றாக அழைத்துச்செல்லவே விரும்புகிறது. ஆனால், முதலில் கட்சியை வலுப்படுத்தவே காங்கிரஸ் விரும்புகிறது.” – மல்லிகார்ஜுன கார்கே

“பெட்ரோல், டீசல் மீதான அதிக வரி விதிப்பால் பணவீக்கத்தை இந்த அரசு தூண்டுகிறது. இந்த நிலையைச் சமாளிப்பதற்கான வழி தெரியாமல் ஒன்றிய அரசு திணறி வருகிறது.” – மாநாட்டில் ப.சிதம்பரம்

“மாநிலங்களின் நிதிநிலை முன்னெப்போதும் இல்லாத வகையில் பலவீனமாக உள்ளது. மேலும், வளர்ச்சி விகிதத்தில் உள்ள தொய்வு தற்போதைய அரசாங்கத்தின் அடையாளமாக உள்ளது.” – ப.சிதம்பரம்

Source link

Leave a Comment

Your email address will not be published.