பெங்களூரு: ”ராமகிருஷ்ண ஹெக்டேவை, 1994ல் ஜனதா தளத்திலிருந்து எப்படி நீக்கினரோ, அதேபோன்று 2023ல் சித்தராமையா, காங்கிரசிலிருந்து வெளியேற்றப்படுவார்,” என தோட்டக்கலைத் துறை அமைச்சர் முனிரத்னா கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது: ராமகிருஷ்ண ஹெக்டேவை, 1994ல் ஜனதா தளத்திலிருந்து எப்படி நீக்கினரோ, அதேபோன்று 2023ல் சித்தராமையா, காங்கிரசிலிருந்து வெளியேற்றப்படுவார். சிறிது காலம் காத்திருந்து பாருங்கள். இவரை காங்கிரசிலிருந்து, வெளியேற்ற வேண்டுமென சிலர் திட்டம் தீட்டுகின்றனர்.எஸ்.ஐ., தேர்வு முறைகேடு குறித்து, காங்கிரசார் ஆதாரமின்றி குற்றஞ்சாட்டுகின்றனர். அனுபவம் இல்லாதவர்கள் கூறினால், சகித்துக் கொள்ளலாம். ஆனால் முதல்வராக இருந்தவரே, இப்படி கூறினால் எப்படி? இந்த முறைகேட்டுக்கும், அமைச்சர் அஸ்வத் நாராயணாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சி.ஐ.டி., அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். இதில் மேலும் பலருக்கு தொடர்புள்ளது. அரசே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சர்வே தேவையா?தேர்தல் நெருங்குகிறது. தாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்பது, காங்கிரசாருக்கு தெரியும். இதற்காகவே மாநிலத்தில், எட்டு சர்வே நடத்துகின்றனர். சித்தராமையா இரண்டு சர்வே நடத்தியுள்ளார். சிவகுமாரும் பல சர்வே நடத்தினார்.அரசியல் நோக்கில், வாய்க்கு வந்தபடி அறிக்கை விட்டு, குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது. காங்கிரஸ் மீதான நம்பிக்கையை, மக்கள் இழந்துள்ளனர். எங்களுக்கு 125 தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.எஸ்.ஐ., தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக, எம்.எல்.ஏ., பிரியங்க் கார்கேவுக்கு, சட்டப்படி நோட்டீஸ் அனுப்பினர்; அவர் பதிலளிக்க வேண்டும். இதில் அவருக்கு என்ன பிரச்னை. சம்பந்தப்பட்ட ஆடியோவை, விசாரணை அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும்.பா.ஜ., குறித்து, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது, காங்கிரசாருக்கு பழக்கமாகி விட்டது. இவர்களிடம் நான் சில கேள்விகளை கேட்கிறேன். எஸ்.ஐ., தேர்வு முறைகேடு எப்போது நடந்தது; தேர்வு நடந்த போது, இக்கட்சியினர் எங்கிருந்தனர். இதை கவனித்தீர்களா?அரசியல் துவேஷத்துக்காக, குடும்பத்தினரை இழுக்கிறீர்கள். அஸ்வத் நாராயணா மீது, தேவையின்றி குற்றஞ்சாட்டுகின்றனர். 40 சதவீதம் கமிஷன் குறித்து, காங்கிரசார் ஆதாரங்களுடன் பேச வேண்டும்.’சாப்ட் கார்னர்’ ம.ஜ.த.,வின் குமாரசாமிக்கு, எப்போது, யார் மீது, ‘சாப்ட் கார்னர்’ வருமென்பது தெரியாது. மக்கள் சொற்படி நடப்பதாக, எம்.பி., சுமலதா அம்பரீஷ் கூறியுள்ளார். அவர் வந்தால் வரவேற்க, எங்கள் கட்சி தயார். என்னிடம் கூறினால், நாளையே அவரை அழைத்து வருவேன்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement