மும்பை:மஹாராஷ்டிராவில் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபத்தில் கோண்டியா மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தல் நடந்தது. இதில், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் பா.ஜ., வெற்றி பெற்றது.
இதையடுத்து, மஹாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் வெளியிட்ட அறிக்கையில், ‘தேசியவாத காங்கிரஸ் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது. கூட்டணி தர்மத்தை மீறி, பா.ஜ.,வுக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் செயல்பட்டுள்ளது. இதை மன்னிக்கவே முடியாது’ என, கூறியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான அஜித் பவார் வெளியிட்ட அறிக்கையில், ‘படோலின் குற்றச்சாட்டு கண்டிக்கத்தக்கது. மூன்று கட்சிகளும் ஒற்றுமையாக செயல்பட்டால் மட்டுமே, அடுத்த சட்டசபை தேர்தலில், பெரும்பான்மை பலத்தை பெற முடியும். கூட்டணிக்கு எதிராக பேசும் அவர் மீது, காங்., தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கூறியுள்ளார்.
Advertisement