Thursday, July 14, 2022
Homeசினிமா செய்திகள்``காத்திருந்து தபால் படிப்பேன்; இப்போ அதுல நானும்..!" - `தபால் தலை' பெருமிதம் குறித்து பி.சுசீலா...

“காத்திருந்து தபால் படிப்பேன்; இப்போ அதுல நானும்..!” – `தபால் தலை’ பெருமிதம் குறித்து பி.சுசீலா | singer p susheela reacts to postal cover honour by indian postal dept

`சுகமான குரல் யார் என்றால்?’ பி.சுசீலாவின் குரலே போட்டியின்றித் தேர்வாகும். கிளாஸிக் காலகட்ட திரை ரசிகர்களின் செவிகளையும் மனதையும் வருடிய இவரின் பாடல்கள், இன்றும் அதே இனிமையுடன் ஒலிக்கின்றன. திரையிசை ஆளுமையாகப் பல பெருமைகளைப் பெற்ற சுசீலாவுக்கு, மற்றுமொரு புகழைச் சேர்த்திருக்கிறது இந்தியத் தபால்துறை.

பி.சுசீலா

பி.சுசீலா

கலைத்துறைச் சேவைக்காக, சுசீலாவின் உருவம் பொறித்த தபால் தலையுடன் கூடிய சிறப்பு போஸ்டல் கவரை வெளியிட்டிருக்கிறது அஞ்சல் துறை. இதுகுறித்து சுசீலாவிடம் பேசினோம்.

“என் பால்ய காலத்துல போன் வசதியெல்லாம் ரொம்பவே குறைவாதான் இருந்துச்சு. அவசரமா யார்கிட்டயாச்சும் பேசணும்னா, தபால் ஆபீஸுக்குப் போய்தான் பேச முடியும். தபால் மூலமாதான் தகவல் பரிமாற்றம் செய்வோம். இதேபோல, ஆல் இந்தியா ரேடியோவுல ஒலிபரப்பாகிற செய்திகளைக் கேட்க ஆவலுடன் காத்துக்கிட்டிருந்த காலமெல்லாம் பசுமையானது. உலக நிகழ்வுகளைத் தெரிஞ்சுக்க உதவிய இந்த ரெண்டு துறைகளும் எங்க வாழ்க்கையில ரொம்பவே முக்கியமானவை.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments