Sunday, July 3, 2022
Homeஅரசியல் செய்திகள்``காந்தியம், கம்யூனிசம், திராவிட மாடல்... மூன்றும் ஒரே ராணுவத்தின் 3 படைகள்” - பீட்டர் அல்போன்ஸ்...

“காந்தியம், கம்யூனிசம், திராவிட மாடல்… மூன்றும் ஒரே ராணுவத்தின் 3 படைகள்” – பீட்டர் அல்போன்ஸ் | muthurasan and peter alphonse speech in sattur tnaca state meeting

ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் எந்த தர்ம நியாயங்களையும் எதிர்பார்க்க முடியாது. இவர்கள் வருங்காலத்தில் காந்தி குறித்த பாடத்தையும் எடுத்து விடுவார்கள். உக்ரைனில் இருந்து அழைத்து வரப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர்கள் அனைவரையும் அந்தந்த மாநிலங்களில் கல்லூரியில் சேர்ந்து அவர்களது மருத்துவப்படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் நிலவி வரும் பொருளாதார பிரச்னையை காரணம் காட்டி கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது. கச்சத்தீவு மீட்கபட வேண்டிய ஒன்று. இதில் மாறுபட்ட கருத்து இல்லை. அதற்கான நேரம் எது என்பது குறித்து அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

மாநாட்டில் பீட்டர் அல்போன்ஸ்

மாநாட்டில் பீட்டர் அல்போன்ஸ்

தொடர்ந்து, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், “காந்தியமாக இருந்தாலும் சரி, கம்யூனிசமாக இருந்தாலும் சரி, திராவிட மாடல் ஆட்சியாக இருந்தாலும் சரி மூன்றும் ஒரே ராணுவத்தில் பணியாற்றும் மூன்று வகைப் படைகள். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய வகுப்புவாத அரசியலை வீழ்த்துவதற்காக காந்தியம், ஆரியம், திராவிடம் ஒன்றாக அணிவகுத்து நின்று மாபெரும் வெற்றியை சாத்தியமாக்க வேண்டும்.

அதற்கு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களுடைய உதவி தேவை. தமிழ்நாட்டையும் இந்தியாவையும் வகுப்புவாத செயல்களிலிருந்து காப்பாற்றுவதற்கான பணிகளை வேகப்படுத்த வேண்டும். புதிய யுக்திகளை கண்டுபிடித்து வகுப்புவாத அரசியலுடைய விஷத்தை முறியடிக்க வேண்டும்” என்றார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments