மைசூரு:“மேலவை டிக்கெட் கிடைக்காமல் போனதால் எந்த வருத்தமும் இல்லை. எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்,” என மாநில பா.ஜ., துணை தலைவர் விஜயேந்திரா கூறினார்.மைசூரில் அவர் கூறியதாவது:
மேலவை டிக்கெட் கிடைக்காமல் போனதால் எந்த வருத்தமும் இல்லை. எல்லாற்றுக்கும் காலம் பதில் சொல்லும். மாநில ஒருங்கிணைப்பு குழு, எதிர்பாராதவிதமாக என் பெயரை சிபாரிசு செய்தது. மேலிட தீர்மானத்தை நான் மதிக்கிறேன். அடுத்தடுத்து எனக்கு அரசியலில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஏமாற்றம் அளிக்க கூடிய சந்தர்ப்பம் இன்னும் வரவில்லை.
என் பெயர் மட்டும் நிராகரிக்கப்படவில்லை. 18 முதல் 19 பேரின் பெயர் சிபாரிசு செய்யப் பட்டது. அதில் நான்கு பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது.குடும்ப அரசியலை ஊக்குவிக்க கூடாது என்பதற்காக, எனக்கு டிக்கெட் கைழுவி போனது என்பது தவறு. முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகனாகத்தான், எனக்கு மாநில பா.ஜ., துணை தலைவர் பதவி கொடுத்துள்ளனர்.எம்.எல்.ஏ., அமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் நான் வேலை செய்யவில்லை. கட்சியை வளர்த்து, வரும் நாட்களில் நானும் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement