Wednesday, June 29, 2022
Homeஅரசியல் செய்திகள்`காலை சிற்றுண்டி முதல் டெல்லி மாடல் பள்ளிகள் வரை..!' - முதல்வர் ஸ்டாலினின் புதிய 5...

`காலை சிற்றுண்டி முதல் டெல்லி மாடல் பள்ளிகள் வரை..!’ – முதல்வர் ஸ்டாலினின் புதிய 5 திட்டங்கள் | tn cm stalin announced new 5 plans in assembly

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று 5 திட்டங்களை அறிவித்திருக்கிறார். அந்த அறிவிப்புகளை பார்க்கலாம்:-

உணவுத்திட்டம்

உணவுத்திட்டம்
நா.ராஜமுருகன்

அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி திட்டம்:

“நகரப் புறத்திலும், கிராமப்புறங்களிலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் காலை நேரத்திலேயே புறப்பட்டுச் செல்வதால் காலை உணவு பெரும்பாலும் தவிர்த்துவிடுகிறார்கள். இதற்கு குடும்பச் சூழலும் காரணமாக இருக்கின்றன. இதனால் அவர்களுக்குப் பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்க இத்திட்டம் வழிவகை செய்யும்.

இந்தத் திட்டம் முதற்கட்டமாக சில நகராட்சிகளிலும், மாநகராட்சிகளிலும், தொலைதூர கிராமங்களிலும் செயல்படுத்தப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாள்களிலும் சத்தான காலை உணவு உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் வழங்கப்படும்.”

ஊட்டச்சத்து

ஊட்டச்சத்து

ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத தமிழகம்!

“திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கிடைத்த புள்ளி விவரத்தில், தமிழ்நாட்டில் உள்ள 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

வயதிற்கு ஏற்ற எடை இல்லாமல் உயரம் இல்லாமல் இருப்பதாலும் வளரும் தலைமுறை ஊட்டச்சத்துடன் வளர, 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவி, ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்குச் சிறப்பு ஊட்டச்சத்து வழங்குதல் போன்றவை இந்த திட்டம் மூலம் செயல்படுத்தப்படும்.”

டெல்லி அரசுப் பள்ளியின் ஆய்வகம்

டெல்லி அரசுப் பள்ளியின் ஆய்வகம்

நவீன பள்ளிகளை உருவாக்கும் திட்டம்!

“கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி சென்றபோது டெல்லி அரசின் மாதிரிப் பள்ளிகளைப் பார்வையிட்டு, அதுபோன்ற பள்ளிகளைத் தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் எனக் கூறியிருந்தேன். எனவே அந்த திட்டத்திற்காக முதற்கட்டமாக 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 25 மாநகராட்சிகளில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் தகைசால் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும்.

இந்தப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்புகள் சீரமைக்கப்படும். அனைத்து கட்டடங்களும் நவீன மயமாக்கப்படும். மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே அளவு இயல், இசை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, கைவினை செயல்பாடுகள் என மாணவர்களின் தனித் திறன் அடையாளம் காணப்பட்டு அதில் அவர்களை வல்லவர்களாக்க இந்தத் திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.”

மருத்துவமனை

மருத்துவமனை
கோப்புப் படம்

நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கும் திட்டம்!

“கிராமப்புறங்களில் சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் இருப்பதுபோல நகர்ப்புறங்களிலும் மருத்துவ நிலையங்கள் அமையவிருக்கின்றன. நகர்ப்புற மக்கள் அரசு மருத்துவமனைக்கு வரும்போது, மருத்துவமனையில் கூட்டம் அதிகமாகி விடுகிறது. எனவே, இந்த சூழலைச் சமாளித்து தரமான ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை மக்கள் இருப்பிடத்திற்கே சென்று வழங்கும் விதமாக, இந்தத் திட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது.

முதற்கட்டமாகச் சென்னை உள்ளிட்ட 25 மாநகராட்சிகளில் 63 நகராட்சிப் பகுதிகளில் 708 மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும். இந்த மருத்துவ திட்டத்தை செயல்படுத்த 180.45 கோடி ரூபாய் செலவில் சொந்த கட்டடங்கள் கட்டப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 முதல் 8 மணி வரை இந்த மருத்துவமனை செயல்படுத்தப்படும். 2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் நல்வாழ்வு என்னும் இலக்கை அடைவோம்.”

`உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’

`உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்!

“தேர்தல் முடிந்தபோது உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் மூலம் மக்களிடமிருந்து நேரடியாகக் கோரிக்கைகள் பெறப்பட்டு அதை நிறைவேற்ற அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுவந்தன. தற்போது அந்தத் திட்டத்தைத் தமிழகத்தின் 234 தொகுதியிலும், அந்தந்த பகுதிகளின் சட்டமன்ற உறுப்பினரின் கண்காணிப்பில் விரிவுபடுத்தப்படும்.

அதிமுக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் திட்டம் எனது நேரடி கண்காணிப்பில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்துக்காக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.”

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments