அதில் கால்வாய் பள்ளத்தாக்கு முழுவதுமே சீனாவின் பகுதி என்றும் அந்த பகுதியில் சீனா பல ஆண்டுகளாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா அத்துமீறி நுழைந்தது என்றும் அதனால் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியை சீனா உரிமை கோருவதை இந்தியா நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்டவா, ‘கால்வான் பள்ளத்தாக்கு பகுதி குறித்த நிலைப்பாடு வரலாற்றுரீதியாக தெளிவாக உள்ளது.
அசல் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு(Line of Actual Control)விவகாரத்தில் மிகவும் மிகைப்படுத்தப்பட்ட ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்களை சீனா முன்வைக்கிறது. முந்தைய காலத்தில் சீனா ஒப்புக்கொண்ட நிலைப்பாட்டில் கூட இந்த வாதம் கிடையாது’ என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.