கோவிலில் திருட முயற்சி
தட்சிண கன்னடா, சுள்யாவின், ஜெயநகரில் ஆதி மொகேர்கள சுவாமி கோவில் உள்ளது. நேற்று காலை கோவிலில் நுழைந்த நபர், திருடும் நோக்கில் உண்டியலை உடைக்க முற்பட்டார். இதை கவனித்த பக்தர்கள், அந்நபரை பிடித்து அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
விபத்தில் இளம்பெண் பலி
துமகூரு குனிகல்லின், எலியூர் கிராமத்தில் வசித்த சின்மயி, 19, பி.காம்., படித்தார். இவர் நேற்று காலை சாலையில் நடந்து செல்லும் போது, பைக் மோதியதில் உயிரிழந்தார்.டிராக்டர் விபத்தில் நபர் பலிசாம்ராஜ்நகர் கொள்ளேகாலின், நரிபுரா கிராமம் அருகில் நேற்று காலை சென்ற டிராக்டர், கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இதில் சிவசாமி என்ற சோமண்ணா, 39, என்பவர் உயிரிழந்தார்.
கேரள லாட்டரி விற்றவர் கைது
சாம்ராஜ்நகர் கொள்ளேகாலின், சந்தேபீதியில் வசிக்கும் நாகண்ணா, 56, சட்டவிரோதமாக கேரள லாட்டரி விற்றார். இவரை நேற்று கைது செய்த போலீசார், 97 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கேரள டிக்கெட்டுகளை, பறிமுதல் செய்தனர்.
பாம்பு கடித்து பெண் பலி
துமகூரு கொரடகரேவின், மாதாவரா கிராமத்தில் வசித்த காமக்கா, 55, என்பவர் விவசாய கூலி வேலை செய்தார். நேற்று மாலை வயலில் இவரை, விஷப்பாம்பு தீண்டியதில், மருத்துவ மனைக்கு அழைத்து செல்லும் போது உயிரிழந்தார்.
மதுபானம் மீட்பு
கதக் முன்டரகியின், சிங்கடராயனகேரி வழியாக, மதுபானம் கடத்துவதாக தெரிந்தது. அங்கு சென்று சோதனையிட்ட கலால்துறை அதிகாரிகள், 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்தனர். வாகன ஓட்டுனர் விஸ்வநாத் ரூப்லெப்பா சவுஹான் கைது செய்யப்பட்டார்.
மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
சிக்கபல்லாபூர் சிந்தாமணியின், தளகவாரா அருகில், நேற்று மாலை சஞ்சு, 22, சித்தப்பா, 20, மின் பாதையை சரி செய்வதில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். மற்றொருவர் காயமடைந்தார்.
Advertisement