Sunday, July 3, 2022
Homeஅரசியல் செய்திகள்"கிறிஸ்தவ அமைச்சர் கோயிலுக்கு வரக்கூடாது" - பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி ஆவேசம் | Bjp MLA...

“கிறிஸ்தவ அமைச்சர் கோயிலுக்கு வரக்கூடாது” – பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி ஆவேசம் | Bjp MLA talking about temple event controversy and protests

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இந்து கோயில் நிகழ்ச்சிகளில் மாற்று மதத்தை சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜை தலைமை தாங்க அழைக்கக்கூடாது என பா.ஜ.க போராடி வருகிறது. அமைச்சர் மனோ தங்கராஜ் குமாரகோவிலில் தேர் வடம்பிடிக்கச் சென்றபோதும், மண்டைக்காட்டில் திருவிளக்கு பூஜையை தொடங்கிவைக்கச் சென்றபோதும் நேரடியாக சென்று போராடியது பா.ஜ.க . போராட்டத்தில் முன்னிலை வகிக்கும் பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தியிடம் இதுபற்றி பேசினோம்.

எம்.ஆர். காந்தி கூறுகையில், “இந்து அல்லாத, இந்து தெய்வங்களை வணங்காத, இந்து ஆலயங்களுக்குச் செல்லாத, இந்து மத கலாசாரத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இந்து ஆலய நிகழ்ச்சிகளில் தலைமை வகிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. தி.மு.க தலைமை தங்கள் கட்சியில் இந்துக்கள் 80 சதவீதம் இருக்கிறார்கள் என கூறியிருந்தது. அமைச்சரவையிலும் அப்படித்தான் இருப்பார்கள். இந்து அமைச்சர்களை தேர் வடம்பிடிக்க அனுப்பினால் நாங்கள் வரவேற்போம். குமாரகோவிலில்கூட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை வரவேற்றோம். குங்குமம், திருநீறு பூசாதவர்களை கோயில்களில் ஏன் வடம் இழுக்க வைக்கிறார்கள்.

இந்துக்களில் யாரும் தகுதிபடைத்தவர்கள் இல்லையா. தி.மு.க இந்துக்களுக்கு எதிரானது இல்லை என நிலைபடுத்திக்கொள்ள இந்து ஆலையங்களுக்கு இந்து அமைச்சர்கள் பங்கெடுக்க வைக்க வேண்டும். இந்து அல்லாதவர்கள் இந்து வழிபாட்டு முறைகளை நம்பாதவர்கள், இந்துக்களின் விழாக்களில் முன்னிலைப்படுத்தக்கூடாது. இந்து கோயில் நிகழ்ச்சிகளில் தலைமைதாங்க அவர்கள் வந்துவிட்டு, நாங்கள் மதக்கலவரத்தை தூண்டுவதாக சொல்கிறார்கள். ஆகம விதிகளை காப்பாற்ற நாங்கள் போராடுவது தவறா?

தேர் வடம்பிடித்து இழுக்கும் அமைச்சர் மனோதங்கராஜ்,

தேர் வடம்பிடித்து இழுக்கும் அமைச்சர் மனோதங்கராஜ்,

இந்துக்களின் உரிமைகளுக்கு பாதிப்பு வரும்போது நாங்கள்தான் பேச வேண்டும். கோயில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள எதிர்ப்பு வந்த பிறகாவது அமைச்சர் வராமல் இருந்திருக்க வேண்டும். அது பெருந்தன்மையை காட்டியிருக்கும். கிறிஸ்தவ அமைச்சர் வரக்கூடாது என பக்தர்கள் எதிர்த்ததால்தான் நாங்கள் அவர்களுக்கு துணையாக போராட போனோம். இது பா.ஜ.க-வின் திட்டம் இல்லை, பக்தர்களின் முடிவு. கோயில் நிகழ்ச்சிகளில் சாதாரணமாக கலந்துகொள்வது வேறு, தலைமைதாங்கி தொடக்கிவைப்பது வேறு. தலைமை தாங்கதான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இனி இதுபோன்ற பிரச்னை வராமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து இந்து அமைச்சர்களை அனுப்ப வேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் கோயில்கள் இந்துக்களுக்கு சொந்தமானது அல்ல என்ற மனநிலை ஏற்பட்டுவிடும்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments