மேலும், இந்திய வீரர்களுக்கு தேவையான குளிர்கால உடைகளும் கடந்த மாதமே கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில், சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கூடுதல் படைகளையும் இந்திய ராணுவம் குவித்து வருகிறது. அதிநவீன பீரங்கிகள், கனரக வாகனங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டு, தயாராக உள்ளன.
மேலும் படிக்க…தலையை துண்டித்து அதிமுக பிரமுகர் கொலை : முன்விரோதத்தால் செங்கல்பட்டில் பயங்கரம்
கடும் பனியிலும் சிறப்பாக செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ராணுவ தளவாடங்கள் தயார் நிலையில் உள்ளன. லடாக் பகுதியில் ஓடும் இந்தஸ் நதியில் வெள்ளப்பெருக்கை தாண்டி செல்லவும், மற்ற தடைகளை கடக்கவும் வாகனங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் உள்ளதாக ராணுவ மேஜர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.