Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்குஜராத்தில் காங்., ஆட்சி அமைக்கும்: ராகுல் நம்பிக்கை| Dinamalar

குஜராத்தில் காங்., ஆட்சி அமைக்கும்: ராகுல் நம்பிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தாகோத்: குஜராத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை உள்ளதாக அக்கட்சி எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டசபைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பணியை துவக்கிவிட்ட நிலையில், தற்போது காங்கிரசும் களமிறங்கியுள்ளது.பழங்குடியினர் அதிகம் வசிக்கும் தாகோத் மாவட்டத்தில் பேரணியில் கலந்து கொண்டு ராகுல் கூறியதாவது:

latest tamil news

கடந்த 2014 நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்றார். அதற்கு முன்னர், குஜராத் முதல்வராக பதவி வகித்தார். அப்போது அவர் செய்த பணிகளை, தற்போது நாட்டிற்கு செய்து வருகிறார். அதற்கு குஜராத் மாடல் என பெயர். இன்றைய இந்தியாவில் இரண்டு இந்தியா உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு இந்தியாவில் பணக்காரர்கள், குறிப்பிட்ட சிலர், கோடீஸ்வரர்கள் மற்றும் அதிகாரிகள் என பணம் மற்றும் அதிகாரம் வைத்துள்ளவர்கள். மற்றொரு இந்தியாவில் சாதாரண மக்கள் உள்ளனர். இந்த இரண்டு இந்தியாவை காங்கிரஸ் விரும்பவில்லை. அனைவரும் சமம் என்பதே கொள்கை. இயற்கை வளங்களை அனைவருக்கும் சமமாக பகிர்ந்து அளிக்கவே காங்கிரஸ் விரும்புகிறது. ஆட்சியில் இருந்த போது அதனை செய்தோம்.

latest tamil news

ஆனால், பா.ஜ., கொள்கையில், குடிநீர், வனம் மற்றும் பழங்குடியினர் மற்றும் ஏழை மக்களுக்கு சொந்தமான நிலம் உள்ளிட்ட மக்களின் வளங்கள், சிலருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு, பழங்குடியினரின் உரிமையை மாநில அரசு பறித்துவிட்டது.

கோவிட் காலத்தில், குஜராத்தில் 3 லட்சம் பேர் உயிரிழந்த போது, தட்டுகள் மற்றும் பாத்திரங்களை ஒலி எழுப்பும்படி, மொபைல் போனில் பிளாஷ் லைட்டை எரியவிடும்படி கூறினார். கங்கையில், உடல்கள் மிதந்து சென்றன. கோவிட் காரணமாக நாட்டில் 50 முதல் 60 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆக்சிஜன் மற்றும் மருந்து ஆகியவை கிடைக்கவில்லை. மருத்துவமனையில் போதிய இடம் கிடைக்காத நிலையில், தட்டுகள் மற்றும் பாத்திரங்கள் மூலம் ஒலி எழுப்பும்படி கூறினார். இவ்வாறு ராகுல் கூறினார்.

latest tamil news

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்த ராகுல், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசுகளின் சாதனையை கூறி, குஜராத்தில் ஆட்சி அமைத்ததும், வாக்குறுதியை நிறைவேற்றுவோம். இவ்வாறு ராகுல் பேசினார்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments