Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக-வுக்கு டஃப் கொடுக்க எதிர்க்கட்சிகளின் வியூகம் என்ன?! | what is...

குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக-வுக்கு டஃப் கொடுக்க எதிர்க்கட்சிகளின் வியூகம் என்ன?! | what is the strategy of opposition parties in presidential election?

எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட எலெக்டொரல் காலேஜின், மொத்த வாக்குகளின் மதிப்பு 10,98,903. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, நாடாளுமன்ற மக்களவையில் 326 எம்.பி-க்களும் மாநிலங்களவையில் 116 எம்.பி-க்களும் என மொத்தம் 442 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். எலெக்டொரல் காலேஜில் பா.ஜ.க 4,65,797 வாக்கு மதிப்புகளையும் அதன் கூட்டணிக் கட்சிகள் 71,329 வாக்கு மதிப்புகளையும் கொண்டுள்ளன. மொத்தத்தில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு மதிப்பு 537,126. இதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் வெற்றிபெற வேண்டுமென்றால், இன்னும் 9,194 வாக்குகள் தேவை என்று சொல்லப்படுகிறது.

ஜெகன் மோகன் ரெட்டி

ஜெகன் மோகன் ரெட்டி

நடைபெறவிருக்கும் குடியரசுத்தலைவர் தேர்தலில், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஒடிஷாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் பங்கு மிக முக்கியமானது. இவர்கள் இருவருமே மத்திய பா.ஜ.க அரசை பகைத்துக்கொள்ள தயாராக இல்லை என்றே தெரிகிறது. எனவே, பொது வேட்பாளரை நிறுத்தினால், ஜெகன் மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் போன்றவர்களின் ஆதரவைப் பெற்றுவிடலாம் என்ற எதிர்க் கட்சிகளின் வியூகம் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு குறைவாக இருக்கிறது என்பதே தற்போதைய நிலை!.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments