Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்தத் திணறுவது ஏன்?! | In President...

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்தத் திணறுவது ஏன்?! | In President election, why the opposition parties are finding difficult to place a common candidate

ஜூலையில் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளருக்கு வெற்றி பெறும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளன. பாஜக தலைமையில் ஆளும் கட்சிகளான தேசிய முன்னணி சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பொது வேட்பாளரை அறிவிக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியது. இதற்காக மூத்த தலைவரான மல்லிகார்ஜுனா கார்கே களம் இறங்கி செயல்படத் தொடங்கினர். எனினும், காங்கிரஸைப் புறந்தள்ளும் வகையில் மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி திடீரென களம் இறங்கினார். அதற்காக டெல்லியில் கடந்த 15-ம் தேதி கூட்டம் நடத்தி ஆலோசிக்க முடிவு செய்தார். இதற்காக, ஒரே சமயத்தில் 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்குக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். ஆனால், இந்தக் கூட்டம் தொடங்கும் முன்பாகவே மூன்று எதிர்க்கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

டெல்லியின் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மம்தாவின் கூட்டத்தில் கலந்துகொள்ள மறுத்து விட்டார். வேட்பாளராக நிறுத்தப்போவது யார் எனத் தெரிந்தால்தான் தன் ஆதரவு அளிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். இத்தனைக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திரிணமூல் தலைவர் மம்தாவிற்கு மிகவும் நெருக்கமான தலைவராகவும் கருதப்படுபவர். ஒடிசாவின் முதல்வரும் பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக்கும், மம்தாவின் கூட்டத்திற்கு வர மறுத்து விட்டார்.

மம்தா, சரத்பவர், அகிலேஷ் யாதவ்

மம்தா, சரத்பவர், அகிலேஷ் யாதவ்

இதன் பின்னணியில் அவரது மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடித் தலைவரான திரௌபதி முர்மு பெயரை பாஜக பரிசீலனை செய்வது காரணமாகக் கருதப்படுகிறது. இவர், ஜார்க்கண்டின் முன்னாள் ஆளுநரான பணியாற்றி ஓய்வு பெற்றவர். திரௌபதி ஆளும்கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அவருக்கு ஆதரவளிப்பதைத் தவிர முதல்வர் பட்நாயக்கிற்கு வேறுவழியில்லை. இதையே முன்னிறுத்தி பிஜு ஜனதா வழக்கம் போல், இதர எதிர்க்கட்சிகளிடம் இருந்து ஒதுங்க விரும்புகிறது. இவர்கள் இருவரை விட முக்கியமாக தெலங்கானா மாநில முதல்வரும், தெலங்கானா ரஷ்டிரிய சமிதியின் தலைவருமான சந்திரசேகர ராவ், இக்கூட்டத்திற்கு வர மறுத்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பா.ஜ.க-வுக்கு எதிராகக் கொடி பிடிப்பதில் முன்னணி வகிக்கும் இவர், காங்கிரஸுக்கும் அழைப்பு விடுத்ததைக் காரணமாக்கி உள்ளார். வழக்கமாக திரிணமூல் தலைவர் மம்தாவிடமிருந்து விலகி இருக்கும் காங்கிரஸ் இந்த முறை அவரின் கூட்டத்தில் கலந்துகொள்ள முன்வந்தது. இந்நிலையில், தெலங்கானா முதல்வரின் முடிவு இதர எதிர்க்கட்சிகளை அதிருப்திக்கு உள்ளாக்கி விட்டது. இக்கூட்டத்தின் மூலம் தேர்வாகும் பொது வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி இல்லை. எனினும், வரும் 2024-இல் மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்கு அடித்தளமாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. தற்போது இதற்கான வாய்ப்பை தெலங்கானா முதல்வர் உள்ளிட்ட மூன்று கட்சிகள் தட்டிக் கழித்துள்ளன.

நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ், அரவிந்த் கெஜ்ரிவால்

நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ், அரவிந்த் கெஜ்ரிவால்

இதனையடுத்து, எதிர்க்கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்யும்பொருட்டு ஆலோசனை நடத்த மம்தா பானா்ஜி, ஏற்பாடு செய்த கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனை, மக்கள் ஜனநாயகக் கட்சி, திமுக உள்ளிட்ட 17 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். அதில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பொது வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்ய எதிர்க்கட்சிகள் கூட்டம் மீண்டும் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மம்தா பானர்ஜி, ‘இன்று பல கட்சிகள் வந்திருந்தன. அனைத்துக் கட்சிகளுக்கும் ஒருமித்த வேட்பாளரை மட்டுமே தேர்வு செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த வேட்பாளருக்கு அனைவரும் தங்கள் ஆதரவை வழங்குவார்கள். இதுகுறித்து மற்றவர்களுடன் கலந்தாலோசிப்போம். இது ஒரு நல்ல ஆரம்பம். பல மாதங்களுக்குப் பிறகு ஒன்றாக அமர்ந்தோம், அதை மீண்டும் செய்வோம்’ என்றார்.

டி.ஆர்.பாலு

டி.ஆர்.பாலு

அதுபோல பொது வேட்பாளரை முடிவு செய்வது குறித்து மீண்டும் கூடி பேசுவோம் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்தார். அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராகப் போட்டியிட சரத்பவார் மறுத்துவிட்டதாகவும் கூறினார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments