இந்நிலையில், சீன அரசுடன் தொடர்புடைய ஷென்ஹூவா என்ற தகவல் தொழில்நுட்பவியல் நிறுவனம், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பலரையும் உளவு பார்த்து வரும் தகவலை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு அம்பலப்படுத்தியுள்ளது.
அத்துடன் இந்தியாவில் இயங்கும் பல நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளையும், உளவு பார்க்கும் இந்த நிறுவனம், முன்னாள் ராணுவத் தளபதிகள் பலரையும் கண்காணித்து, அவர்கள் தொடர்பான தகவல்களை சேகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க...புதிய பாம்பன் பாலத்தின் அனிமேசன் வீடியோவை வெளியிட்ட மத்திய அமைச்சர்..
இந்த வகையில் குடியரசுத் தலைவர் தொடங்கி, நிறுவனங்களில் தலைவர்கள் வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை இந்த நிறுவனம் உளவு பார்ப்பது அம்பலமாகியுள்ளது. எனவே இந்த நிறுவனம் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, பிரிட்டன் ராணி குடும்பத்தையும் இந்த நிறுவனம் உளவு பார்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.