இரு தரப்பு இடையே கைக்கலப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறின. இதனை அடுத்து, பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக பிரச்னையை தீர்க்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ், பிபி-15 ரோந்து பகுதி ஆகிய 3 இடங்களில் இருந்து சீன ராணுவமும், இந்திய ராணுவமும் தங்கள் வீரர்களில் கணிசமான பேரை திரும்ப பெற்றுக் கொண்டதாகவும், இரு தரப்பினரும் அமைத்து இருந்து கூடாரங்கள் உள்ளிட்டவை அப்புறப்படுத்தப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது.
பங்கோங் சோ, தவுலத் பெக் ஒல்டி ஆகிய பகுதிகளில் எல்லையில் முகாமிட்டு இருக்கும் இரு நாட்டு படைகளின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் எல்லையில் பதற்றத்தை மேலும் தணிக்க இரு நாட்டு ராணுவ மேஜர் ஜெனரல்கள் இன்று சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Also See: தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் எவை… எவை…? – மாவட்டம் வாரியாக முழு பட்டியல்
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.