Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்கேரள முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை| Dinamalar

கேரள முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை| Dinamalar

திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதான சரிதா நாயரின் பாலியல் புகார் தொடர்பாக கேரள முதல்வர் அதிகாரப்பூர்வ வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று (மே 3) சோதனை மேற்கொண்டனர்.

சோலார் பேனல் மோசடி தொடர்பாக கைதான சரிதாநாயர், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி , கேரள அமைச்சர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது பலாத்கார புகார் கூறினார். உம்மன் சாண்டி, அரசு இல்லத்தில் பலாத்காரம் செய்ததாக புகார் கூறி இருந்தார். தொடர்ந்து பினராயி விஜயன் முதல்வரான பின்பு இந்த சம்பவம் தொடர்பாக குறித்த விசாரணை சிபிஐ.,க்கு மாற்றப்பட்டது.இந்நிலையில், திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தங்கியுள்ள வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள், பலாத்கார புகார் தொடர்பான ஆதாரங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தினர். அப்போது சரிதாநாயரும் உடன் வந்தார்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments