Wednesday, July 6, 2022
Homeஅரசியல் செய்திகள்கைவிடப்படும் கைக்குழந்தைகள் அதிகரிப்பு: என்ன ஆனது தொட்டில் குழந்தை திட்டம்?! | article about current...

கைவிடப்படும் கைக்குழந்தைகள் அதிகரிப்பு: என்ன ஆனது தொட்டில் குழந்தை திட்டம்?! | article about current situation about tamilnadu government cradle baby scheme

தொட்டில் குழந்தை திட்டம்:

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு பச்சிளம் குழந்தைகளைத் தெருக்களில் வீசி செல்லும் சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும், சமீபகாலமாக, தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மதுரை, தேனி, திண்டுக்கல், தருமபுரி போன்ற மாவட்டங்களில் பெண் சிசுக்கொலை அதிகரித்துக்காணப்பட்டது ஒரு ஆய்வில் தெரியவந்தது. குடும்ப வறுமை காரணமாகவும், பெண் குழந்தையை வளர்க்க விருப்பம் இல்லாதவர்களும் தங்களுக்குக் குழந்தையைக் கொலை செய்வதும், சாலைகளில் வீசி செல்லும் அவலமும் அதிகரித்தது. பெண் சிசுக் கொலையை முற்றிலும் தடுக்கும் நோக்கத்தோடு, கடந்த 1992-ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா `தொட்டில் குழந்தை’ திட்டத்தை அறிமுகம் செய்துவைத்தார்.

தொட்டில் குழந்தை திட்டம்

தொட்டில் குழந்தை திட்டம்

முதலில் சேலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டம், படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் காப்பகங்களில் தொட்டில் வைக்கப்பட்டன. தங்கள் குழந்தையை வளர்க்க விரும்பாத பெற்றோர்கள் அந்த குழந்தையை இந்த தொட்டிலில் வைத்துச் செல்லலாம். அந்த குழந்தையை முறைப்படி, உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்குத் தத்து கொடுக்கப்படும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. தற்போது இந்த திட்டம் பெயரளவில் மட்டுமே செயல்பட்டுவருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments