Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்கோலிவுட் ஸ்பைடர்: சூர்யா படத்தை இயக்கும் `அயலான்' இயக்குநர்; உதயநிதியால் தமிழ்த் திரையுலகம் அப்செட்? |...

கோலிவுட் ஸ்பைடர்: சூர்யா படத்தை இயக்கும் `அயலான்’ இயக்குநர்; உதயநிதியால் தமிழ்த் திரையுலகம் அப்செட்? | Kollywood Spyder: From Suriya’s next director to Udhayanidhi’s movie release plans

* சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டாலும், அது ஏலியன் கதை என்பதால் கிராபிக்ஸ் வேலைகள் நிறைய இருக்கின்றன. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் பல மாதங்களுக்கு முன்னரே துவக்கப்பட்டு விட்டாலும், இன்னமும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெறாமலேயே இருக்கிறதாம். அதற்கு இவ்வளவு செலவு வைக்கும் எனப் படக்குழு நினைக்கவில்லை. லட்சங்கள் தண்ணீராக செலவு ஆகிக்கொண்டிருப்பதால், கிராபிக்ஸ் பணிகளை நிதிநிலை காரணமாக நிறுத்தி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்கிடையே படத்தின் இயக்குநர் அடுத்து சூர்யாவை வைத்து இயக்க உள்ளார். அதன் கதைகளில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாராம்.

பிரியங்கா மோகன்

பிரியங்கா மோகன்

* பிரியங்கா மோகன் அடுத்து நெல்சன் இயக்கத்தில் ‘ரஜினி 169’ படத்தில் நடிக்கிறார். இதனையடுத்து ஜெயம் ரவியுடன் ஜோடி சேருகிறார். எம்.ராஜேஷ் ஜெயம் ரவியை வைத்து இயக்கும் இப்படத்தில் நடிக்க பிரியங்கா மோகனிடம் பேசி வருகிறார்கள்.

* ‘மேயாத மான்’, ‘ஆடை’ படங்களின் இயக்குநர் ரத்னகுமாரின் ‘குலுகுலு’ படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்து நடிக்கும் படத்திற்குச் சென்றுவிட்டார் சந்தானம். தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் தயாராகும் இப்படத்தை கன்னடத்தின் பிரபல டைரக்டர் பிரசாந்த்ராஜ் இயக்குகிறார். சந்தானம் ஜோடியாக தான்யா ஹோப் நடிக்கிறார். பெங்களூருவில் பூஜையோடு, படப்பிடிப்பும் துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த ஷெட்யூலை முடித்துக் கொண்டு சென்னை, பேங்காக், லண்டன் நகரங்களில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டு வருகின்றனர்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments