Saturday, June 18, 2022
Homeஉலக செய்திகள்கோவிட்-19 நோயாளிகள் இறக்கும் அபாயத்தில் உள்ளனரா என தெரிந்து கொள்ளலாம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கோவிட்-19 நோயாளிகள் இறக்கும் அபாயத்தில் உள்ளனரா என தெரிந்து கொள்ளலாம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸ் 2வது அலை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், வைரஸ் பாதிக்கப்பட்ட பலருக்கும் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருவது சற்று கவலையளிக்க கூடியதாக இருக்கிறது. இந்தநிலையில் கோவிட்-19 சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள், இறக்கும் அபாயத்தில் இருக்கிறார்களா என்பதை இதயம் சம்மந்தப்பட்ட பரிசோதனையில் தெரிந்து கொள்ளலாம் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

கோவிட்-19 தொற்று நோய் பாதிப்பை ஏற்படுத்தும் முதன்மையான SARS-Co V-2 வைரஸ், சுவாசப்பாதையை முதலில் பாதிக்கிறது. இந்த பாதிப்பு, கார்டியோ வாஸ்குலார் என்ற இதய ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதிலே, அர்ரிதமியா எனப்படும் சீரற்ற இதயத்துடிப்பு, அக்யூட் கொரோனாரி சிண்ட்ரம், மையோகார்டிட்டிஸ் மற்றும் பல்மனரி எம்பலிசம் உள்ளிட்ட, இதயத்தசை பலவீனம், வீக்கம், அடைப்பு போன்ற பல்வேறு இதய நோய்களை உருவாக்கலாம்.

இத்தாலியின் சலெர்னோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 1,401 நோயாளிகளிடம் பரிசோதனையை மேற்கொண்டது. அதில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள், சுமார் 226 நோயாளிகள் (16.1 சதவீதம்), டிரான்ஸ்தொராசிக் எக்கோ கார்டியோகிராஃபி சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில், மருத்துவமனையில் 68 நோயாளிகள் இறந்தனர் (30.1 சதவீதம்).

Also Read:  கொடைக்கானலில் கிளைமேட்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனாலும் புலம்பும் சுற்றுலா பயணிகள்..!

LVEF எனப்படும் தாழ்வான இடது பக்க வென்ட்ரிகுலார் எஜக்ஷன் ஃபிராக்ஷன், லோ ட்ரைஸ்கபிட் ஆனுலர் பிளேன் சிஸ்டாலிக் எக்ஸ்கர்ஷன் மற்றும் அக்யூட் ரெஸ்பிரேட்டரி டிஸ்ட்ரஸ் சிண்டரம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள், நோயாளிகள் மருத்துவமனையிலேயே இறந்ததற்கான காரணங்கள் என்று கண்டறியப்பட்டது.

“நோய்த்தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து, கிளினிக்கல் மற்றும் எக்கோகார்டியோ அளவுருக்கள், நோயாளிகள் இதய நோய்கள் பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் இறக்கக்கூடிய அபாயம் எந்த அளவுக்கு அதிகமாக உள்ளது என்று தீர்மானிக்க உதவும்” என்று சலேர்னோ பல்கலைக்கழகத்தின் முன்னணி எழுத்தாளர் ஏஞ்சலோ சில்வெரியோ தெரிவித்தார்.

Also Read:  ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு ஆபாச படம் மூலம் ஒரு நாளைக்கு ரூ.6-8 லட்சம் வருமானம் – வெளியான பகீர் தகவல்!

யூரோப்பியன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் இன்வெஸ்டிகேஷன் இந்த ஆய்வு அறிக்கையினை வெளியிட்டது. அதில் கோவிட் நோயாளிகளை கூடுதலாக பாதிக்கக்கூடிய கார்டியோவாஸ்குலார் சிக்கல்கள், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை பாதிக்கலாம். மேலும், ஆரம்பகால LVEF கண்டறிவது, கோவிட் நோயாளிகளில் ஏற்படும் ஆபத்தான விளைவுகளின் காரணமாக, இறப்பதற்கு அதிக வாய்ப்புள்ள நோயாளிகளை அடையாளம் காண்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஆய்வு கூறுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள இதய ரீதியான சிக்கல்கள் தவிர்த்து, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் பிற இதய நோய் உள்ள நபர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால், மிகவும் கடுமையான அறிகுறிகளை எதிர்கொள்வார்கள். மேலும், அவர்களுக்கு நோய்த்தொற்று பெரிய அளவிலான சிக்கல்களையும் உருவாக்கக்கூடும் என்று வளர்ந்து வரும் ஆராய்ச்சி அமைப்பு தெரிவிக்கிறது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments