சச்சின் மகள் சாரா விரைவில் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறாரா? -Tendulkar’s daughter Sarah makes her Bollywood debut?

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் தனது தந்தை வழியில் கிரிக்கெட்டில் பயணிக்கத் தொடங்கிவிட்டார். சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர் லண்டனில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு மாடலிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சாராவை டிவிட்டரில் 1.8 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். அடிக்கடி சாரா வெளியிடும் புகைப்படங்கள் மிகவும் பிரபலம். கடந்த ஆண்டே அவர் சில பிராண்ட் விளம்பரங்களில் நடித்துள்ளார். நடிகை பனிதா சந்து, தனியா ஸ்ரப் ஆகியோரும் சாராவுடன் நடித்திருந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தங்களில் வெளியானது. மருத்துவம் படித்துள்ள 24 வயது சாராவிற்கு நடிப்பில்தான் ஆர்வம். எனவேதான் சில விளம்பர வீடியோக்களில் நடித்தார்.

தற்போது பாலிவுட்டில் நுழைய தீவிரம் காட்டி வரும் சாரா அதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் படத்தில் அறிமுகமாக இருக்கிறார். சாரா என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு அவரது பெற்றோர் முழு ஆதரவு கொடுத்துள்ளனர். பாலிவுட்டில் இப்போது ஒடிடி தளம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே ஒடிடி தளம் மூலம் பாலிவுட்டில் நுழைகிறாரா அல்லது பெரிய திரையில் அறிமுகமாகிறாரா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாரா நடிகர் சாஹித் கபூர் நடிக்கும் படத்தில் அறிமுகமாக இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அந்த செய்தியை சச்சின் தெண்டுல்கரே மறுத்திருந்தார். எனது மகள் இப்போது படிப்பில் கவனம் செலுத்துவதாகவும், அதில் அவர் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், படத்தில் நடிக்க இருப்பதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. இது போன்ற செய்தி எப்படி வெளியானது என்று தெரியவில்லை என்று சச்சின் வெளியிட்டிருந்த செய்தியில் குறிப்பிட்டு இருந்தார்.

Source link

Leave a Comment

Your email address will not be published.