Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்சண்டிகர்: தொழிலதிபரை மிரட்டிப் பணம் பறிக்க முயற்சி - 4 சிபிஐ அதிகாரிகள் கைது! |...

சண்டிகர்: தொழிலதிபரை மிரட்டிப் பணம் பறிக்க முயற்சி – 4 சிபிஐ அதிகாரிகள் கைது! | CBI arrests its four officers on corruption charges

சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கடந்த 10-ம் தேதி போலீஸில், “மர்ம நபர்கள் 6 பேர் என்னை தொடர்புகொண்டு, `நீங்கள் தீவிரவாதிகளுக்கு பணம் கொடுத்து வருவது எங்களுக்கு தெரியும். அதனால், உங்கள் மீது நாங்கள் போலீஸில் புகாரளிக்கப் போகிறோம். நீங்கள் சட்ட நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என்றால், எங்களுக்கு ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும்’ என்று மிரட்டினார்கள். எனக்கு எந்த தீவிரவாதிகளுடனும் தொடர்பு கிடையாது, அதனால் பணம் பறிக்கும் நோக்கில் என்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் புகார் அளித்திருந்தார்.

அவர் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், இது தொடர்பான விசாரணையில் இறங்கினர். அப்போது, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகளான சுமித் குப்தா, பிரதீப் ராணா, அங்கூர் குமார், ஆகாஷ் அஹ்லாவத் ஆகிய 4 பேர் அந்த தொழிலதிபரை மிரட்டிப் பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது.

 கைது

கைது
சித்தரிப்புப் படம்

அதையடுத்து, போலீஸார் அளித்த தகவலின்பேரில், மத்திய புலனாய்வுத் துறை அந்த 4 பேரையும் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், அந்த 4 பேரையும் நேற்று மத்திய புலனாய்வுத்துறை கைதுசெய்தது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments