Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்சந்திரசேகர ராவ் அரசு மீது மோடி தாக்கு| Dinamalar

சந்திரசேகர ராவ் அரசு மீது மோடி தாக்கு| Dinamalar

ஐதராபாத்: நாட்டை கொள்ளை அடிப்பதிலேயே ஒரு குடும்பத்தினர் அரசியல் கட்சி நடத்துகின்றனர் என தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமீதி கட்சியின் முதல்வர் சந்திரசேகர ராவ் மீது பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.

ஐதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: தெலுங்கானா அரசு ஊழலில் திளைத்து வருகிறது. இங்குள்ள ஆட்சியாளர்கள் அவரவர் வங்கி கணக்கை நிரப்புவதிலேயே குறியாக உள்ளனர். ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சி நிர்வாகம் சிக்கி தவிக்கிறது. நாட்டை கொள்ளை அடிப்பதிலேயே ஒரு குடும்பத்தினர் அரசியல் கட்சி நடத்துகின்றனர். இங்குள்ள ஆட்சி ஜனநாயகத்திற்கு எதிரானது.

latest tamil news

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போனது. வாரிசு அரசியலால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அவர்கள் தங்களின் குடும்ப முன்னேற்றத்திற்கு மட்டும் உழைக்கின்றனர். நாட்டின் வளர்ச்சியில் அக்கறை இல்லை. இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments