Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்சன் குடும்ப விருதுகளில் புறக்கணிப்பு... மீண்டும் விஜய் டிவிக்குத் திரும்புகிறாரா அஸீம்? | Serial actor...

சன் குடும்ப விருதுகளில் புறக்கணிப்பு… மீண்டும் விஜய் டிவிக்குத் திரும்புகிறாரா அஸீம்? | Serial actor Azeem disappointed over Sun Kudumba Viruthugal award nominations

இந்நிலையில் இந்த விருதுகளுக்கான பிரிவில் ஃபேவரைட் ஹீரோவுக்கான விருதின் நாமினேஷன் பட்டியலில் கூட தன் பெயர் இல்லாததால் ’பூவே உனக்காக’ ஹீரோ அஸீம் கடும் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆரம்பத்தில் சன் டிவியில்தான் தன் கரியரைத் துவக்கியவர் அஸீம். ‘பிரியமானவள்’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்த அஸீம், பிறகு விஜய் டிவி பக்கம் போனார். அங்கு ‘பகல் நிலவு’ ‘கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய சீரியல்கள் நடித்தார். பிறகு மீண்டும் சன் டிவிக்கு சில மாதங்களுக்கு முன்புதான் வந்தார். இவர் வந்த பிறகு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ‘பூவே உனக்காக’ தொடர் 10 மணிக்கு ஒளிப்பரப்பானது.

பூவே உனக்காக அஸீம் - சாயா சிங்

பூவே உனக்காக அஸீம் – சாயா சிங்

சில வாரங்கள் பத்து மணி ஸ்லாட்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியையே ரேட்டிங்கில் ’பூவே உனக்காக’ தொடர் முந்தியதும், அதனைச் சேனல் கொண்டாடியதும் கூட நடந்தது.

இதனால் இந்தாண்டு சன் குடும்ப விருதுகளில் சிறந்த ஹீரோவுக்கான விருது ரேஸில் தன் பெயரும் இருக்கும் என உறுதியாக நம்பினாராம்.

ஆனால், ’அன்பே வா’ வருண், ’சித்தி 2’ கவின், ‘கண்ணான கண்ணே’ யுவா, ‘கயல்’ எழில், ‘ரோஜா’ அர்ஜுன், ‘தாலாட்டு’ விஜய் என மொத்தம் 6 பேர் கொண்ட நாமினேஷன் பட்டியல் வெளியானதும் அவர் அதிர்ச்சி அடைந்ததாகச் சொல்கிறார்கள் அவரது நட்பு வட்டத்தினர்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments