புதுச்சேரி : குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை, பாப்ஸ்கோ ஊழியர் சங்கத்தினர்(ஏ.ஐ.டி.யூ.சி.,) முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.போராட்டத்திற்கு சங்கத்தின் கவுரவ தலைவர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் அமுதவல்லி முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி., மாநில நிர்வாகிகள் அபிஷேகம், தினேஷ் பொன்னையா, துரைசெல்வம், பாப்ஸ்கோ சங்க நிர்வாகிகள் ஜெய்சங்கர், பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாப்ஸ்கோ நிறுவனத்தில் கடந்த 54 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை ஊழியர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும், கடந்தாண்டு தீபாவளி பசார் நடத்தியற்கு அரசு வழங்க வேண்டிய மானிய தொகை ரூ.62 லட்சத்தை அளிக்க வேண்டும். பாப்ஸ்கோ மூலம் நடத்தப்படும் 47 ரேஷன் கடைகளுக்கு, கடந்த 6 ஆண்டாக வழங்க வேண்டிய வாடகைக்கு அரசு ஒதுக்கீடு செய்த ரூ.1.30 கோடியையும், அரிசி வினியோகத்திற்கு உயர்த்தப்பட்ட தொகையையும், பொங்கல் பண்டிகைக்கு இலவச பொருட்கள் வழங்கியதற்கு கமிஷன் தொகை ரூ. 31 லட்சத்து 15 ஆயிரத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
Advertisement