Wednesday, June 29, 2022
Homeஅரசியல் செய்திகள்சாத்தான்குளம் வழக்கில் திடீர் திருப்பம்... முதல் குற்றவாளி ஸ்ரீதர் பரபரப்பு தகவல்! | Sathankulam Jayaraj...

சாத்தான்குளம் வழக்கில் திடீர் திருப்பம்… முதல் குற்றவாளி ஸ்ரீதர் பரபரப்பு தகவல்! | Sathankulam Jayaraj Phoenix murder case a1 accused written a letter to the court

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் காவல் நிலையத்தில் அடித்து, சித்ரவதை செய்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தக் கொலை தொடர்பாக, குறிப்பிட்ட காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட பத்துப் பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைதான காவலர் பால்ராஜ் இறந்துவிட்ட நிலையில், தற்போது ஒன்பது பேர் சிறையிலிருக்கிறார்கள்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர்கள்

குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர்கள்

இந்த நிலையில், இந்த வழக்கின் முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தற்போது மதுரை மத்தியச் சிறையில் இருக்கிறார். சிறையிலிருக்கும் அவர், மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், `இந்த வழக்கில் ஏ-2 முதல் ஏ-9 வரை குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்கள்தான் ஜெயராஜ், பென்னிக்ஸை அடித்துக் கொலை செய்தார்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments