கர்நாடக மாநிலம், பெங்களூரில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நெருக்கமான இந்தியா ஃபவுண்டேஷன், சனிக்கிழமையன்று `இந்தியா 2047′ என்ற தலைப்பில் அமர்வுக் கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் வங்காளதேச கல்வியமைச்சர் திபு மோனி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அப்போது கூட்டத்தில் பேசிய திபு மோனி, “உலகளாவிய சக்திகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கவேண்டுமெனில், அரசியலமைப்பில் கூறப்பட்டிருக்கும் கனவுகளை இந்தியா நனவாக்க வேண்டும். குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவற்றுக்கு உத்தரவாதம் அளிப்பதன் மூலம் இந்தியா தன் குடிகளின் திறமைகளை வெளிகொண்டுவருவதற்கான ஒரு தளத்தை அமைக்க முடியும். மேலும் இது, குறிப்பாகப் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் அனைத்து சமூகத்திலிருக்கும் பெண்களுக்குமான தளமாக இருக்கும்.