Wednesday, June 29, 2022
Homeஜோதிடம்சிவகங்கை திருமலை மடைக்கருப்பணசாமி விழா: ஆண்கள் மட்டும் பங்குபெற்ற பிரமாண்டக் கறி விருந்து!

சிவகங்கை திருமலை மடைக்கருப்பணசாமி விழா: ஆண்கள் மட்டும் பங்குபெற்ற பிரமாண்டக் கறி விருந்து!

வளமையோ, வறட்சியோ… எதுவாக இருந்தாலும் கூத்தும் கொண்டாட்டமுமாக இருப்பவர்கள் தென்மாவட்ட மக்கள். அதிலும் கிராமங்களில் தினுசு தினுசான திருவிழாக்களை நடத்தி அசத்திவிடுவார்கள்.

மதுரை மாவட்டத்தைப்போலவே சுற்றியுள்ள மாவட்டங்களில் சோறு திங்க ஒரு திருவிழா, சேறு பூச ஒரு திருவிழா, மீன் பிடிக்க ஒரு திருவிழா, சாமிக்கு சரக்கு படைக்க ஒரு விழா, காய்கறி சாப்பாட்டுக்கு ஒரு விழா, பிரியாணிக்கு ஒரு விழா என்று அதகளப்படுத்தி விடுவார்கள்.

மடைக்கருப்பணசாமி விழா கறி விருந்து

சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் திருமலை கிராமத்தில் நடந்த திருவிழாவும் அதைத்தொடர்ந்து நடந்த பிரமாண்டக் கறி விருந்தும் ஆச்சர்யப்படுத்தின.

ஊர்க் கண்மாயில் உள்ள மடையை மடைக்கருப்பணசாமியாக நினைத்து வழிபாடு செய்வதுடன், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆண்கள் மட்டும் கலந்துகொண்டு கிடா வெட்டிப் பல்லாயிரம் பேருக்கு விருந்து வைக்கிறார்கள்.

மடைக்கருப்பணசாமி விழா கறி விருந்து

கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த இந்தத் திருவிழா இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்றது.

இங்கு சாமியிடம் வேண்டினாலும் வேண்டுதல் நிறைவேறினாலும் அதற்குக் கறுப்பு நிற ஆடுகளை மட்டும் சாமிக்குக் காணிக்கையாக வழங்குவது வழக்கம்.

மடைக்கருப்பணசாமி விழா

இந்த ஆண்டு 267 கறுப்பு நிற ஆடுகளை வழங்கிய மக்கள் அதனை சாமிக்கு பலிகொடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து கெளலியிடம் சம்மதம் கிடைத்த பின்னர் கறி விருந்து வைத்தனர். இந்த விருந்தில் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று விருந்துண்டனர்.

மடைக்கருப்பணசாமி விழா

தங்கள் விவசாய வேலைக்குத் தண்ணீர் வரக் காரணமான மடையையே தங்களது சாமியாகக் கருதி கிடா வெட்டி ஆண்கள் மட்டுமே பங்கேற்று விருந்து உண்ணும் இத்திருவிழா ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments