சீனாவிடம் அதி நவீன ஆயுதங்கள் உள்ளன… சீன அரசின் அதிகாரப்பூர்வ நாளிதழ் க்ளோபல் டைம்ஸ் விளக்கம்

சீன அரசின் அதிகாரப்பூர்வ ஏடான க்ளோபல் டைம்ஸ் ஏடு, சீன ராணுவத்தின் ஆயுத பலத்தை உணர்த்தும் வகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியா – சீனா இடையே 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட டோக்லாம் மோதலில் இருந்து, உயரமான பகுதிகளுக்கு சென்று தாக்குதல் நடத்துவதற்கான ஆயுத பலத்தை அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயரமான பகுதிகளில் பயன்படுத்துவதற்கான TYPE 15 டேங்குகள், Z – 20 ஹெலிகாப்டர்கள், GJ-2 ட்ரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்கள், சீன ராணுவத்தின் பலத்தை உணர்த்தும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லடாக்கில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலை, மிகமோசமான மோதல் போக்கு என்றும் க்ளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில், படைபலத்தை விளக்கி சீனா கட்டுரை வெளியிட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனிடையே, எல்லைப்பகுதியில் இருநாட்டு ராணுவமும் சக்திவாய்ந்த ஆயுதங்களை குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also read… லடாக்கில் நீடிக்கும் பதற்றம்… எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் இருநாட்டு படைகள்!


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see…

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

Leave a Comment

Your email address will not be published.