கொரோனா ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மகாராஷ்டிர அரசு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக சீனா நிறுவனங்களுடன் அண்மையில் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டது.
சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம், பிஎம்ஐ எலெக்ட்ரோ மொபைலிட்டி உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் சுமார் 5 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்க ஒப்புதல் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் அத்துமீறி தாக்கியதில் 20 வீரர்கள் உயிரிழந்ததால், அந்நாட்டுடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நிறுத்திவைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
Also read… வாரக்கணக்கில் எரியும் தீ – எண்ணெய் வயலை மூட அசாம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு
மத்திய அரசுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், சீனாவுடன் இனி எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ள வேண்டாம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் மாநில தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.