சீனா பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் ட்வீட US is ready to mediate India-China border dispute says Donald Trump san – News18 Tamil

இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில், ஐந்தாயிரம் வீரர்களை சீனா குவித்துள்ளது. இந்திய எல்லைப்பகுதியான லடாக்கில், சீன வீரர்களின் அத்துமீறலால் இருநாட்டு வீரர்களிடையே மோதல் அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன. இந்நிலையில் லடாக் அருகே ஐந்தாயிரம் வீரர்களை குவித்துள்ள சீனா, அவர்களை போர் பயிற்சியிலும் ஈடுபடுத்தி வருகிறது.

இதையடுத்து சீனாவின் நடவடிக்கைகளை கண்காணித்து, அதற்கேற்றாற்போல் இந்திய ராணுவமும் வீரர்களை குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இருதரப்பிலும் மோதல் போக்கும், பதற்றமும் தொடர்ந்து நீடிக்கிறது.

பதற்ற நிலை தொடர்பாக இரு நாட்டு தரப்பிலும் உயர் மட்ட அளவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், இருநாடுகள் இடையே தற்போது எழுந்துள்ள எல்லை விவகாரம் குறித்து, மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாகவும், அது தங்களால் முடியும் என்றும் கூறியுள்ளார். மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக இருநாடுகளுக்கும் தெரிவித்துள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


 

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

Leave a Comment

Your email address will not be published.