சீனா மோதல் ஏன்? ஒரு வரலாற்றுக்குறிப்பு India china war history – News18 Tamil

18-ம் நூற்றாண்டில், வேகமாக வளரத்தொடங்கிய சீக்கியப் பேரரசு ஜம்மு வரை விரிவடைந்து, லடாக்கை அதனுடன் இணைத்துக்கொண்டது. அடுத்ததாக திபெத்தின் மீது படையெடுத்தது. இதைத்தொடர்ந்து சீனாவுக்கும், சீக்கிய பேரரசுக்கும் இடையில் போர் மூண்டது. சீன ராணுவம், சீக்கியர்களை திபெத்திலிருந்து விரட்டிக்கொண்டே லடாக்கிற்குள் நழைந்தது. ஆனால் லடாக்கில், சீக்கியர்களிடம் சீனா தோல்வியுற்றது. இறுதியில், அமைதி உடன்படிக்கையின் அடிப்படையில் போர் முடிவுக்கு வந்தது.

1914-ம் ஆண்டு இந்தியா, சீனா, திபெத் நாடுகளுக்கு இடையே எல்லைகோட்டை வரைவதற்கான ஆலோசனைக் கூட்டம் சிம்லாவில் நடைபெற்றது. இதில் பிரிட்டிஷ் இந்தியா சார்பாக மெக்மஹோன் என்ற அதிகாரி கலந்துகொண்டார். இந்த ஆலோசனையிலிருந்து சீனா பாதியிலேயே வெளியேறியதை தொடர்ந்து, திபெத்தும், இந்தியாவும் தாங்களாகவே எல்லைகளை பிரித்துக்கொண்டன. இந்த எல்லைக்கோடு அதை வரைய காரணமாக இருந்த மெக்மஹோன் பெயரிலேயே அழைக்கப்பட்டது.

1949-ம் ஆண்டு, மாசேதுங் தலைமையிலான சீன மக்கள் விடுதலைப்படை புரட்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்றி சோசியலிச சீனாவை நிறுவியது. திபெத்தில் நடைமுறையில் இருந்த நிலவுடைமை மக்களை சுரண்டுவதாக குற்றம்சாட்டிய சோசியலிச சீனா, மக்களை விடுவிப்பதாக கூறி திபெத்தை ஆக்கிரமித்தது.

இந்நிலையில், 1954-ம் ஆண்டு இந்தியா, சீனா இடையில் இரண்டு நாடுகளும் ஒருவர் மற்றவரின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்தியா வெளியிட்ட வரைபடத்தில் அக்சாஸ் சின் என்று அழைக்கப்படும் லடாக்கை ஒட்டியுள்ள நிலபரப்பு இந்தியாவின் பகுதியாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை சீனா எதிர்க்கவே இந்தியா, சீனா இடையே மோதல் தொடங்கியது.

1959-ம் ஆண்டு திபெத் மக்களின் கிளர்ச்சியை சீன ராணுவம் கடுமையாக ஒடுக்கியது. திபெத் பௌத்த மதத்தின் தலைவர் தலாய் லாமா தலைமையில் ஆயிரக்கணக்கான திபெத் மக்கள் இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். தலாய் லாமா, ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் நாடு கடந்த திபெத் அரசாங்கத்தை அமைத்தார். தலாய் லாமாவிற்கு ஆதரவளித்ததால் இந்தியா, சீனா இடையே மோதல் முற்றத் தொடங்கி அது போராக வெடித்தது.

1962-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி, தொடங்கிய இந்திய சீன போரின் போது, சீன ராணுவம் லடாக் பகுதியிலும், மெக்மஹோன் எல்லைக் கோட்டை தாண்டியும் தாக்குதல் நடத்தியது. எல்லையை தாண்டி முன்னேறிய சீன ராணுவம் லடாக்கின் முக்கிய பகுதிளையும், கிழக்கு போர்முனையில் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியையும் கைப்பற்றியது.

1962-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி, இந்தியா சீன இடையில் ஏற்பட்ட போர் ஒரு மாதம் நீடித்தது. அன்று தொடங்கி தற்போது வரை, வரையப்பட்டாத எல்லைக்கோடு தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் அவ்வப்போது பிரச்சனை எழுந்து வருகிறது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

Leave a Comment

Your email address will not be published.